உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகை மழை 9 அறிவிப்புகள்:

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகை மழை 9 அறிவிப்புகள்:

சென்னை,: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று சலுகைகளை வாரி வழங்கினார். கடந்த ஜனவரி 1 முதல், அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்; திருமண முன்பணம் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:நிர்வாகத்தின் துாண்களாகவும், அரசின் கரங்களாகவும் விளங்குவோர் அரசு ஊழியர்கள்.அகில இந்திய அளவில் தமிழகம் பல வகையில் முதலிடத்திலும், முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் உழைப்பும், சீரிய பங்களிப்பும், இதற்கு மிக முக்கிய காரணம்.அரசு ஊழியர்கள் நலன் கருதி, ஒன்பது அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 2026 ஏப்., 1 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து, பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்த, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இந்த ஆண்டே அந்த அறிவிப்பை செயல்படுத்த கோரிக்கை வைத்தனர்.அதை ஏற்று, ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, அக்., 1 முதல் சரண் செய்து பணப்பலன் பெறலாம். இதை செயல்படுத்த ஆண்டுக்கு, 3,561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநில அரசு பணியாளர்களுக்கும் கடந்த ஜன., 1 முதல், அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் பேர் பயன் பெறுவர். ஆண்டுக்கு கூடுதலாக 1,252 கோடி ரூபாய் செலவிடப்படும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10,000 ரூபாய் என்பது 20,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவர் அரசு பணியாளர்களுக்கான கல்வி முன்பணம், தொழிற்கல்வி பயில 1 லட்சம் ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க 50,000 ரூபாய் என உயர்த்தப்படும் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்; ஆண்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. இது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட, 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை, 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், 4.71 லட்சம் பேர் பயன் பெறுவர்; அரசுக்கு கூடுதலாக 24 கோடி ரூபாய் செலவாகும் ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம், 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், 52,000 பேர் பயன் பெறுவர்; கூடுதலாக 10 கோடி ரூபாய் செலவு ஏற்படும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய குழு அமைத்து, ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கை அடிப்படையில், அந்த குழு தன் அறிக்கை மற்றும் பரிந்துரையை, வரும் செப்., 30க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும் திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு ஒன்பது மாதமாக இருந்த மகப்பேறு விடுப்பு, 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம், தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக, அரசு பணிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர், மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல், பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. பணி மூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, இனி வரும் காலங்களில், அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை, அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

R.RAMACHANDRAN
ஏப் 30, 2025 07:07

லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என இறுமாந்து சில தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு கள்ளத்தனமாக சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு மக்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என உள்ளவர்களால் தான் தமிழகம் அனைத்திலும் முதல் மாநிலமாக திகழ்கிறது என வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வாரி வழங்குகின்றனர் பாரி வள்ளல்கள்.அவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு இவர்கள் ஒன்றும் செய்வது இல்லை.


S.SRINIVASAN
ஏப் 30, 2025 05:44

முதல்வரின் உச்சபட்ச கேப்புமாரிதனம் தேர்தலுக்காக அரசு ஊழியர்களுக்கு இது நன்றாகவே தெரியும் இதில் வெற்றி என்பது யாருக்கும் இல்லை ஏனெனில் இது 4 வருட காத்திருப்பிற்கு பிறகு இதை செய்தது. இதை எப்படி குறிப்பால் உணர்த்துவது என்றால் கருணாநிதி உயிருடன் இருக்கும் போது ஒரு நாள் சோறு போடாமல் அவர் இறந்த பிறகு அவருடைய சமாதியில் தயிர் வடை படைக்கிறது போல


C.SRIRAM
ஏப் 29, 2025 23:07

ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியே ஐம்பதாயிரம் கோடிக்கு மேலே . ஓட்டுக்காக பொருளாதாரத்தை ஒழிக்கும் திருட்டு திராவிடத்தனம்


Venkatesh
ஏப் 29, 2025 21:40

தந்தையார் முட்டி போட்டு லுங்கி களையும் அங்கி களையும் .....


kumar
ஏப் 29, 2025 20:07

மக்கள் பிரச்சனைகளை தீர்க்காம இந்த லஞ்சம், ஊழல் பண்ணி ஒரு வேலையும் செய்யாம மக்களை அலயவிடும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பென்ஷன் ஒரு கேடா? ஏன்டா ஒன்றுக்கும் லாயக்கில்லாத பயலே அதுக்கு மட்டும் பணம் இருக்காடா? டேய் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க பாருடா திருட்டு நாயே.


VEMBAIYAN
ஏப் 29, 2025 19:21

இந்த அரசு இப்போது கடன் கொடுத்து அதை தவணை முறையில் வசூல் செய்யும் ஆசிரியர்களுக்கு என்ன பலன், அகவிலை எப்போதும் வர கூடிய ஒன்று, ஆனால் இந்த அரசு ஆசிரியகளுக்கு இது வரை ஒன்றும் செய்ய வில்லை.


சந்திரன்
ஏப் 29, 2025 18:22

எலும்பு துண்டு


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 17:59

பாரதிதாசனின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு விளக்காக - நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார் ஆனால் உண்மை என்ன "வீட்டுக்கு வெளங்காமே நாட்டுக்கு குண்டர்களால் வாழ்ந்திடவேண்டும்" இது தான் திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசின் கொள்கை என்கின்றார் என்று வைத்துக்கொள்ளவேண்டும்


RAVINDRAN.G
ஏப் 29, 2025 17:22

இவர்கள் வாங்குகிற சம்பளமே ரொம்ப அதிகம். வேலை பெரிதாக இல்லை. ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம். இவர்கள் வாங்கும் சம்பளத்தை 5 வேலை இல்லாத திறமையான இளைஞர்களுக்கு கொடுக்கலாம். ஒழுங்கா வேலை செய்வார்கள். இவர்கள் வாங்கும் சம்பளத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். ஏகப்பட்ட லீவு வேற இருக்கு. முதலில் இந்த யூனியன் காரர்களை ஒழிக்கணும். வேலைசெய்யாம உசுப்பேத்தி விட்டுட்டு வெட்டி நியாயம் பேசுவார்கள். மேலும் அரசு வேலை செய்பவர்களுக்கு 50 வயதுதான் ஒய்வு பெரும் வயது என்று சட்டம் இயற்றவேண்டும். ஏன்னா நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள்.


oviya vijay
ஏப் 29, 2025 15:32

10 லட்சம் கோடி கடன். ஒரு நயா பைசா கூட செலவு செய்ய முடியாது...டுபாக்கூர் அறிவிப்பு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை