உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் பக்கமே அமலாக்க துறை வரக்கூடாது; ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி மனு

டாஸ்மாக் பக்கமே அமலாக்க துறை வரக்கூடாது; ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பண மோசடி தொடர்பாக, 'டாஸ்மாக்' நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

விரோதமானது

'அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது; மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்; எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படியும் பரிந்துரைத்தனர். அதேநேரத்தில், அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால், அதை திருத்தம் செய்து, புதிய மனு தாக்கல் செய்ய, அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

திருத்தப்பட்ட மனு

அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்துள்ளன. அதில் உள்ள முக்கியமான கோரிக்கைகள்:மனி லாண்டரிங் தடுப்பு சட்டத்தில், 'நபர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது; அரசு, அரசு அதிகாரி, அரசின் நிறுவனம் ஆகியவற்றுக்கு அந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாதுமேற்படி சட்டத்தின் கீழ் மாநில அரசின் அதிகாரிகளுக்கான பொறுப்பு, அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு உதவி செய்வது மட்டுமே என்று கோர்ட் அறிவிக்க வேண்டும்அவ்வாறு உதவி செய்வதற்கு மாநில அரசு எந்த அதிகாரிகளை நியமனம் செய்கிறதோ, அவர்களின் உதவியை மட்டுமே அமலாக்கத் துறை கேட்க முடியும் என கோர்ட் உத்தரவிட வேண்டும் அவ்வாறு அமலாக்கத் துறை கேட்கும் உதவி என்பது, செக்ஷன் 54ன் கீழ் வரும் விசாரணைக்காக மட்டுமே தவிர, செக்ஷன் 17ன் கீழ் வரும் சோதனை, பறிமுதல் ஆகியவற்றுக்கோ அல்லது செக்ஷன் 50ன் கீழ் வரும் சம்மன் அனுப்புவது, ஆவணங்களை தாக்கல் செய்வது போன்ற வேலைகளுக்கோ பொருந்தாது என கோர்ட் அறிவிக்க வேண்டும்தமிழக அரசுக்கு சொந்தமான எந்த நிறுவனத்திலும், கட்டடத்திலும் அமலாக்கத்துறையினர் மேற்படி சட்டத்தின் 17வது செக்ஷனை காட்டி, நுழையவோ, சோதனை நடத்தவோ, பறிமுதல் செய்யவோ கூடாது என்று கோர்ட் உத்தரவிட வேண்டும்டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் நுழைந்ததும், சோதனை நடத்தியதும், ஆவணங்களை பறிமுதல் செய்ததும் சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆகவே செல்லாது என்று கோர்ட் அறிவிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு விரிவாக மனுவை தயாரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

என்றும் இந்தியன்
ஏப் 07, 2025 16:34

டாஸ்மாக் பக்கமே அமலாக்க துறை வரக்கூடாது ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி மனு?????நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஊழல் செய்கின்றோம் ரூ 42,000 கோடி வருமானத்தில் வெறும் ரூ 12,000 கோடி தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடிகின்றது இது அக்கிரமம் அநியாயம் என்று மக்களே உங்களுக்கு தெரியவில்லை. ஆகவே தான் இந்த மனு. இப்படிக்கு திருட்டு திராவிட மடியல் அறிவிலி அரசு


என்றும் இந்தியன்
ஏப் 07, 2025 16:20

எங்களது ஊழல் வாழ்வாதாரத்தை பாதிப்பதால் இந்த அதிரடி மனு என்று அறிந்து கொள்ளவும் - இப்படிக்கு ஊழல் இல்லாமல் நானில்லை எனக்கொரு ஊழல் இருக்கின்றது என்றும் என்னை பண மூட்டை சேர்க்க வைக்கின்றது என்று மனதில் நினைக்கும் திருட்டு திராவிட மடியல் அரசு


Sivagiri
ஏப் 06, 2025 09:08

கரெக்டுதானேப்பா... இந்த ஈடி, சிபிஐ, ஐடி எல்லாம் சேர்ந்து எப்படி, பத்து ரூபா மந்திரியை தூக்கினங்களோ அதே மாதிரி, மற்ற மந்திரிகளையும் தூக்க வேண்டியதுதானே, அவங்க வாயாலேயே உண்மையை வரவழைத்து, அவங்க கையாலேயே கொள்ளை அடிச்சதையும் கொண்டு வந்து கொடுக்க வச்சிரலாமே... தமிழ்நாடு போலீசு ஏதாவது கொலை கொள்ளை நடந்தா குற்றவாளிகளை நடித்து காட்ட சொல்றா மாதிரி, அதே மாதிரி, நடந்ததை நடித்து காட்ட வைக்கலாம்ல . . . கோர்ட்டும் , பப்லிக்கும் நம்புமலை . .


mpselvam mpselvam
ஏப் 02, 2025 21:18

மதுரை மண்டல டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பி. அருஅருண் சத்யா கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்தார் இவரது காலத்தில் டாஸ்மாக்கில் செய்யாத முறைகேடுகளை எல்லை இல்லை அனைத்தும் முறைகேடுகள்தான் அவர் செய்த தவறை எதிர்த்து புகார் செய்தால் பணம் கொடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிடுவதுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கையும் அவருக்கு சாதகமாக வருவதுபோல் நேர் செய்துவிட்டார் தவறு இருந்தும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பணம் பெற்றுக்கொண்டு நீதிபதிகளிடம் சமரசம் செய்துவிடுகிறார்கள் நீதியை பணமே முடிவு செய்கிறது ஆனால் ஆண்டவன் தீர்ப்பு வேற மாதிரி நியாயப்படி தமதமாக ஒரு சில வழக்குகள் குற்றங்களில் காலத்தால் காட்டி கொடுக்கிறது சில வழக்குகளில்


Karthikeyan
ஏப் 02, 2025 18:30

டாஸ்மாக் பக்கமே தமிழக அரசு வரக்கூடாது - இது எப்படி ? மத்திய அரசு இதனை privatization செய்யலாம்.


மூர்க்கன்
ஏப் 04, 2025 16:51

அப்படி ஒரு அதிகாரம் இல்லை உங்கள் கூற்றுப்படி லக்ஷ்மண ரேகையை தாண்ட கூடாது. அப்புறம் தமிழக அரசு மத்திய அரசின் நிறுவனங்களை தனது கண்காணிப்பில் எடுக்கும் .


K r Madheshwaran
ஏப் 02, 2025 15:23

இதெல்லாம் ரொம்ப ஓவர் லூசுப்பையன் கொள்ளையடிச்ச மக்கள் காசை கொடுத்து கள்ள ஓட்டு வாங்கி குறைஞ்ச வித்தியாசத்துல ஜெயிச்சு வந்துட்டு இவனுங்க ஏதோ கடவுள் மாதிரி இவனுங்கள கேட்ககூடாது விசாரிக்க கூடாதுன்னு சொல்ரது தவறு மேலும் இதற்கு தடை கொடுத்துவிட்டு கேசில் இருந்து விலகிய நீதிபதிகளை விடக்கூடாது அவங்க ஏன் அப்படி கொடுத்தாங்க அப்புறம் ஏன் விலகுறாங்க இதுள்ல பணம் விளையாடுது யார் வீட்டு காசு


lakshmikanthan S.B
ஏப் 02, 2025 12:37

சட்டமும் திட்டமும் நம்மால் வகுக்கப்பட்டதுதானே. தலைமை இதில் மாறலாம் என்பதும் ஒன்றுதானே?


Ramesh Sargam
ஏப் 02, 2025 12:25

தமிழக அரசுக்கு சொந்தமான எந்த நிறுவனத்திலும், கட்டடத்திலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை நடந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவேண்டுமா?


visu
ஏப் 02, 2025 08:37

மத்திய அரசு உடனே இத சட்ட ஓட்டைகளை நீக்கி மாநில அரசு ஊழல்களை விசாரிக்க எந்த அனுமதியும் தேவையற்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் இவங்க ஊழல் செய்வாங்க அது தெரிந்தாலும் சட்ட ஓட்டை காரணமா மத்திய அரசு கண்டுகொள்ள கூடாதாமா


siva prabha
ஏப் 02, 2025 08:03

தமிழ் நாட்டை ஆளும் நாங்கள் அரசு கஜானா திவால் ஆகும் வரை கொள்ளை அடிப்போம் அதற்கு நீதிமன்றமும் எங்களுடன் கை கோர்க்க வேண்டும் என்று உத்தரவிட சொல்கிறார்கள் அவர்களின் மனு கேளி கூத்தாக இருக்கிறது


சமீபத்திய செய்தி