உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடிதம் எழுதியதுடன் ஒதுங்கிய தமிழக அரசு: மா விவசாயிகளுக்கு ரூ.150 கோடி நஷ்டம்

கடிதம் எழுதியதுடன் ஒதுங்கிய தமிழக அரசு: மா விவசாயிகளுக்கு ரூ.150 கோடி நஷ்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டதால், மாம்பழ விவசாயிகளுக்கு 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 3.60 லட்சம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஆண்டுதோறும், 9.50 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. அல்போன்சா, மல்கோவா, ருமானி, பங்கனபள்ளி, பெங்களூரா, ஜவாரி, நீலம் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், பெங்களூரா மாம்பழங்கள், கூழ் தயாரிக்க அதிக அளவில் ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, இப்பழம் கிலோ, 20 முதல் 30 ரூபாய்க்கு ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு, 4 ரூபாயாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆலைகளில் மாம்பழக் கூழ் அதிகம் தேக்கம் அடைந்துள்ளதால், கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 2.50 லட்சம் டன் அளவிற்கு, பெங்களூரா ரக மாம்பழங்கள் பயனின்றி வீணாகி உள்ளன. அதிக உற்பத்தி காரணமாக, பங்கனபள்ளி, ஜவாரி, ருமானி மாம்பழங்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை.இது குறித்து, தமிழக அரசிடம் விவசாயிகள் முறையிட்டனர்; போராட்டங்களிலும் இறங்கினர். உடன், இப்பிரச்னை தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிவ் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், மாம்பழங்களுக்கு டன்னுக்கு 7,776 ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் வாயிலாக, டன் 5,000 ரூபாய்க்கு மாம்பழங்கள் கொள்முதல் செய்தால், 2,766 ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். இதை, சந்தை தலையிட்டு, விலை திட்டம் வாயிலாக மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் பிரச்னை முடிந்ததாக தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இதனால், தமிழக மா விவசாயிகளுக்கு, நடப்பாண்டு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:தமிழகத்தை விட ஆந்திரா, கர்நாடகாவில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள் அதிகம் உள்ளன. நடப்பாண்டு, அங்கு தமிழக மாம்பழங்களை கொள்முதல் செய்ய தடை போட்டு விட்டனர். தமிழகத்தில் உள்ள ஆலைகளும் இயங்கவில்லை. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், மா விவசாயிகளுக்கு 150 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இனியாவது தமிழகத்தில் பொருட்களை மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும். தமிழக அரசு மாம்பழ விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சீசன் முடியும் நேரம் என்பதால், பிரச்னை முடிந்ததாக வேளாண் வணிகப்பிரிவினர் ஒதுங்கி நிற்காமல், விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venukopal, S
ஜூலை 07, 2025 18:35

இதெல்லாம் ஒரு நஷ்டமா, இல்ல கஷ்டமா...200 ரூ, ஓட்டுக்கு வெகுமதி அப்பறம் என்ன...நாளை நமதே 234 லும் நமதே


Bhaskaran
ஜூலை 07, 2025 12:33

திராவிட மாதிரி அரசிடம் இதை எதிர்பார்க்கலாமா


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2025 12:26

திமுக என்றுமே விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி அல்ல... தமிழர்களுக்கு மறதி அதிகம் என்பதால் திமுகவின் பிழைப்பு ஓடுகிறது...


SRINIVASAN MANI
ஜூலை 07, 2025 12:11

இந்த வருடம் தமிழக மாம்பழ விவசாயிகளுக்கும் மாங்கனி கட்சிக்கும் நேரம் சரியில்லை...


RAMESH
ஜூலை 07, 2025 10:57

வீரமணி தலைமையில் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும். இதை செய்யுமா.. கூட்டணி கட்சிகள் வருமா. சைகோ உண்டியல்....டோல்கேட்... சிலிண்டர் குண்டு என்ன செய்கிறது.. எதையாவது செய்யுங்க... பாஜக உள்ளே வந்து விடும்


Seshadri Duraiswamy
ஜூலை 07, 2025 06:39

கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி வந்து உடன் STICKER ஒட்ட வருவார்கள்


Srinivasan Krishnamoorthy
ஜூலை 07, 2025 08:37

you cannot expect free all time.. these will be crying over sun tv


Ambedkumar
ஜூலை 07, 2025 05:20

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தனது மாநிலத்திற்கான காரியங்களை மிக சிறப்பாக சாதித்துக்கொண்டிருக்கிறார். மாம்பழ விவசாயிகளின் பிரச்சினைக்கு மத்திய அரசு உதவியுடன் நல்ல சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கேள்வி. சமீபத்தில் அவருக்கு நெருக்கமானவர் பிரதம மந்திரியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். எங்கெங்கெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து காரியம் சாதிக்கும் அதே வேலையில், சில நேரங்களில் நமது மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவதுதான் ராஜ தந்திரம் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு என்ற தமிழக நிலைப்பாட்டை பெரும்பாலான தமிழக மக்களே விரும்பவில்லை என்பதுதான் உண்மை.


Mani . V
ஜூலை 07, 2025 04:46

மக்கள் விரோத அரசு இதற்கு மட்டுமா கடிதம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்கிறது? மீனவர் பிரச்சினைக்கும் இதே வேலையைத்தான் செய்கிறது. அதுவும் தவறு இல்லாமல் இருக்குமா அல்லது இளமை புகுத்தி விடும் என்று இருக்குமா? என்று தெரியவில்லை.


சிட்டுக்குருவி
ஜூலை 07, 2025 04:01

இப்பதான் அடுத்த எலெக்ஷனுக்கு லன்ஜம் கொடுக்கும் வேளையில் இரங்கி இருக்கின்றார்கள் .அதெல்லாம் முடிந்த பிறகு ஏதாவது மீதமிருந்தால் நாக்கில் தேன் தடவுவார்கள் .இல்லையென்றால் அடுத்த மாம்பழ சீசனுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார்கள் .அதற்க்கு முந்தி நீங்கள் அவர்களுக்கு ஒட்டு அளிப்பாதாக வாக்குறுதி அளிக்கவேண்டும் .


சிட்டுக்குருவி
ஜூலை 07, 2025 04:01

இப்பதான் அடுத்த எலெக்ஷனுக்கு லன்ஜம் கொடுக்கும் வேளையில் இரங்கி இருக்கின்றார்கள் .அதெல்லாம் முடிந்த பிறகு ஏதாவது மீதமிருந்தால் நாக்கில் தேன் தடவுவார்கள் .இல்லையென்றால் அடுத்த மாம்பழ சீசனுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார்கள் .அதற்க்கு முந்தி நீங்கள் அவர்களுக்கு ஒட்டு அளிப்பாதாக வாக்குறுதி அளிக்கவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை