உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைவரையும் மது குடிக்க வைக்க தமிழக அரசு டார்கெட்: நயினார் நாகேந்திரன்

அனைவரையும் மது குடிக்க வைக்க தமிழக அரசு டார்கெட்: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: ''தமிழக அரசு, அனைவரையும் அதிகமாக குடிக்க வைக்க வேண்டும் என்று ரூ.600 கோடி டார்கெட் செய்திருந்தது. அதையும் தாண்டி மதுவிற்பனை ரூ.750 கோடி சென்று விட்டது'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.காரைக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் சரிபார்ப்பு முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்து நடக்கிறது. தற்போது முதல்வர் ஸ்டாலின் வாக்காளர் சரிபார்ப்பு குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதற்குக் காரணம் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயம் இல்லையென்றால் 'இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gpjd6zz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு, அனைவரையும் அதிகமாக குடிக்க வைக்க வேண்டும் என்று ரூ.600 கோடி டார்கெட் செய்திருந்தது. அதையும் தாண்டி மதுவிற்பனை ரூ.750 கோடி சென்று விட்டது. கடந்த ஜூன் மாதம் 6.30 லட்சம் ஏக்கர் பயிர் நடப்பட்டு செப்.5 ஆம் தேதி அறுவடை செய்வது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரியும். தெரிந்திருந்தும் அவர், 60 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. ஆனால் வேளாண்துறை அமைச்சர் பருவமழை திடீரென்று வந்ததாக கூறுகிறார்.முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன், சட்டசபையில் பேசும்போது பருவகால நிலையை அறிந்து கொள்ள ரூ 10, கோடிக்கு தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்கியதாக தெரிவித்தார். அவை எங்கே இருக்கிறது. முன்னாள் நிதியமைச்சர் கூறியது பொய்யா?. இல்லை வேளாண்மை அமைச்சர் சொல்வது பொய்யா?. அனைத்துமே பொய்யாகத் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2025 20:10

உங்கள் நைனார் உள்பட அவர் கருத்துக்கு ஆமாம் போட்டவர்களில் பாதிக்கும் மேலே குடிப்பவர்களே அது அவர்களுக்கும் தெரியும். நைனார் ஆடீம்காவில் இருக்கும் போது கூட டார்கெட் போட்டு தான் வித்தாங்க. அப்போ இவர் எங்கிருந்தார்?


Venugopal S
அக் 28, 2025 18:04

இந்த இ பி எஸ், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அன்புமணி போன்ற தலைவர்கள் எல்லோரும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள தினமும் ஏதாவது இதுபோல் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது, இல்லாவிட்டால் மக்கள் இவர்களை மறந்து விடுவார்கள் என்ற பயம் தான் காரணம்!


சேகர்
அக் 28, 2025 14:04

இந்த அறிக்கை நன்றாக உள்ளது. அப்படியே, கொரனா கால கட்டத்தில் மது கடை திறக்க அனுமதித்த எடப்பாடியையும் கண்டியுங்கள்.


V RAMASWAMY
அக் 28, 2025 10:00

அப்பொழுது தானே போதையிலிருக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கமுடியும், மக்களை எப்பொழுதும் போதையில் வைத்தால் நிதானமில்லாமல் மற்ற சமூக குற்றங்களை கண்டுகொள்ளாமலிருக்க முடியும்.


Mani . V
அக் 28, 2025 05:18

இதென்னய்யா கொடுமையாக இருக்கிறது? ஆக எங்கள் மாடல் ஆக அரசு கொண்டுவரும் ஆக அனைத்து திட்டங்களும் ஆக அனைவருக்கும் சென்று ஆக சேரவேண்டும் என்று ஆக குரல் கொடுக்கும் பொழுது ஆக இந்த சோமபான அருமையை ஆக அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று ஆக நாங்கள் பாடுபடுவது ஆக தவறா?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 23:50

இவரே ஒரு மொடாக்கு.


MARUTHU PANDIAR
அக் 27, 2025 20:36

67 இல் தொடங்கி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டது தான் எங்க பொய்த்த்திறமை. போய் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ற வேலைய பாருய்யா அப்படீன்னு பேசிக்கறாங்க.


ராஜா
அக் 27, 2025 20:32

காயச்சிய சாராயம் தந்த பயிற்சி திருவிளையாடல் இப்ப ஜோராக ஆற்று வெள்ளம் போல் ஓடுகிறது


திகழ்ஓவியன்
அக் 27, 2025 20:19

எல்லா மாநிலங்கைளிலும் மக்கள் வாயில் தான் குடிக்கிறார்கள்


vivek
அக் 27, 2025 22:34

ஆனால் நீ மட்டும் அறிவாலய அடிமை அலுமினிய தட்டில் குடிக்கிறாய் திகழ்


Narayanan Muthu
அக் 27, 2025 19:59

முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவை தடை செய்து விட்டு அப்புறம் பேசணும். மது விலக்கு அமலில் உள்ள குஜராத்தில் சாராயம் பேக்கெடுத்து ஓடுதாம் அதை தடை செய்யுங்க


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 23:51

போன் போட்டால் வீட்டுக்கே டெலிவரி.


NellaiBaskar
அக் 28, 2025 04:46

சாராயத்தை பற்றி பேசினால் குஜராத்தை பாருங்க உபி யை பாருங்க அங்கெல்லாம் சாராயம் இருக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று படிக்கச் சொன்னால் இது தமிழ் நாடு மஸ்தான் வேலைகள் எடுபடாது என்று கூவுகிறீர்கள் இது என்ன மாதிரியான அரசியல்.


vivek
அக் 28, 2025 07:58

உன் வீட்டில் நெருப்பு எரியும் போது அதை முதலில் அனைபாயா. அல்லது பக்கத்து வீட்டை குறை சொல்வாயா. ..


நிக்கோல்தாம்சன்
அக் 28, 2025 10:10

நம் வீட்டை கழுவும் வாய்ப்பிருந்தால் நாம்தான் கழுவ வேண்டும், அடுத்தவன் வீட்டை பார் என்று காரணம் காட்டிக்கொண்டிருப்பது கேவலமானது அய்யா, மதுவிலக்கு யாரவது முன்னெடுக்க ஆரம்பித்தாள் எல்லாரும் பின்வருவார்கள், ஏராளமான தீய மாடல்களுக்கு முன்னுதாரமாக இருக்கும் அரசுக்கு நல்ல விஷயத்தில் முன்னுதாரணம் அபூர்வ வாய்ப்பு பயன்படுத்த சொல்வீர்களா உங்களின் வாரிசு அரசியல்வியாதிகளை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை