உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை கோட்டை விட்டது தமிழகம்; தி.மு.க., அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை கோட்டை விட்டது தமிழகம்; தி.மு.க., அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது' என்று பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; சீனாவைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான பி.ஒய்.டி (BYD - Build Your Dreams) ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது கார் உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இந்த கார் ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.உலக சந்தையில் மின்சார வாகனங்கள் விற்பனையில் டெஸ்லா நிறுவனத்தை விஞ்சி வரும் பி.ஒய்.டி கார் ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழகம், குஜராத், மஹாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன. இந்த மாநிலங்களில் தமிழகத்திற்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன. அதற்குக் காரணம், 2019ம் ஆண்டிலேயே பி.ஒய்.டி கார் நிறுவனம் ரூ.2,800 கோடி செலவில் உதிரிபாகங்களை இணைத்து மின்சார வாகனங்களை உருவாக்கும் ஆலையை அமைத்திருந்தது. ஆனாலும் தமிழக அரசால் பி.ஒய்.டி நிறுவனத்தைத் தமிழகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.மின்சார கார்கள் உற்பத்திக்கு சாதகமான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதும், அரசின் அனுமதியை பெறுவது மிகவும் எளிதாக இருப்பதும் தான் பி.ஒய்.டி கார் நிறுவனம் தெலுங்கானாவுக்கு செல்வதற்கு காரணம் ஆகும். ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.ஆந்திர மாநிலத்திடம் ரூ.8,000 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகளை கடந்த 3 மாதங்களில் தமிழக அரசு இழந்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு தான் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த வருத்தம் மறைவதற்கு முன்பாகவே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு கைநழுவி தெலுங்கானாவுக்கு சென்றிருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறன் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், நடப்பாண்டில் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.தமிழத்திற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழகம் எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Nagarajan S
மார் 31, 2025 20:46

திமுகாவிற்கு அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், தேவையில்லாமல், மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு, பாராளுமன்ற தொகுதிகள் குறைப்பு போன்ற பிரச்னைகளை எழுப்பி,தற்போது மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய நிதி வராமை போன்ற வற்றில் கவனம் செலுத்தி தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை கோட்டை விட்டுள்ளது.


Mediagoons
மார் 31, 2025 19:52

சில ஆயிரம் கோடி முதலீடு என்று கூறிக்கொண்டு பலலச்சம் கோடி கொள்ளையடிக்கும் இந்துமதவாத அரசு ஆதரவுபெற்ற கும்பலை துரதியடித்தது பாராட்டுக்குரியது


M Ramachandran
மார் 31, 2025 19:23

இதெல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லை. குடும்ப சொத்தை மேலும் மேலும் சேர்ப்பது எப்படிஅதைய எப்படி காபந்து பண்ணுவது எப்படி என்பதை தான் யோசிக்க தோனும். மற்ற தெல்லாம் இவர்களுக்கு எண்ணு வதற்கு நேரமும் இல்லை அது முக்கிய மில்லை.


Poovan Ragavan
மார் 31, 2025 19:20

கமிஷன் இல்லாமல் திமுகவிடம் எந்த வேலையும் ஆகாது. அடுத்து இவர்களிடம் கேட்ட கமிஷன் ஹூண்டாய் நிறுவனம் கொடுத்து இருக்குமோ என்னவோ... மேலும் ஹூண்டாய் நிறுவனம் முரசொலி மாறன் அவர்கள் கொண்டு வந்தது அதனால் அதில் அவர்களுக்கு பங்கு இருந்தாலும் இருக்கலாம் அதனால் கூட புதிய நிறுவனம் எதற்கு என்று வி.ட்டிருக்கலாம்


Ray
மார் 31, 2025 19:11

எடப்பாடி மோடியோட துணைகொண்டு நாலே ஆண்டுகளில் பலப்பல ஆலைகளையும் பெரும் தொழில் நிறுவனங்களையும் கொண்டுவந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும்பணியாற்றினார். ஆனா திருட்டு தீய மூக்காவால தமிழகத்துக்கு ஒண்ணுமே செய்ய முடியல. அவுக கடைய கட்டிட்டு நடையை கட்டுணும். மறுபடியும் எடப்பாடி வந்து கரெக்ட்டா குவார்ட்டர்லி டில்லி விசிட் அடிச்சு நல்லா பாத்துக்குவார். அந்த மூட்டைங்கதான் எரிஞ்சு காட்டி கொடுத்துடாம பாத்துக்கணும்.


Poovan Ragavan
மார் 31, 2025 18:33

85000 கோடி மதிப்பு கொண்ட நிறுவனம் போனதால் அரசுக்கு நஷ்டம் இல்லை. வாக்களித்த மக்களை திமுக நினைத்து பார்க்கவில்லை. நிறுவனம் ஆரம்பிக்கும் விதிமுறையில் சமரசம் செய்ய வேண்டிய விதிமுறைகளில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரே பிரச்னை கமிஷனாக இருக்கலாம் அல்லது ஹோண்டாய் நிறுவனம் வர்த்தகம் குறையுமோ என்ற காரணமும் இருக்கலாம் எனவே அவர்களிடம் கமிஷன் கனிசமாக வாங்கிட்டு விட்டிருக்கலாம். ஆதாயம் இல்லாமல் திமுக ஒரு புதிய விஷயத்தை அவ்வளவு எளிதில் செய்து விடாது.


Ray
மார் 31, 2025 21:12

மோடி குஜராத்துக்கு லவுட்டிகிட்டு போகாமே நாய்டுவுக்கு ஏதாவது செஞ்சு கூட்டணிஆட்சியை தக்க வச்சுக்கணுமேன்னு ஆந்திராவுக்கு கைய்ய காட்டி உட்ருக்காருங்கோ இதுபோல இன்னும் பலவற்றையும் மோடி கெடுத்து குஜராத்துக்கு தள்ளிக் கொண்டு போயிருப்பதெல்லாம் பலருக்கும்தெரிந்திருக்க வில்லை என்பது கே தெளிவாகிறது து அன்பு மணிக்கு தெரியாதா என்ன? இருந்தாலும் ஸ்டாலினை எக்ஸ்போஸ் பண்றதா இன்றைய அறிக்கை அவ்வளவே


என்றும் இந்தியன்
மார் 31, 2025 17:52

இதில் ஒரு தவறும் இல்லையே. 45% கமிஷன் கேட்டிருக்கின்றது திமுக அது அவர்களால் கொடுக்க முடியவில்லை ஆகவே திமுக அவர்களை விரட்டி விட்டது


Sampath Kumar
மார் 31, 2025 17:16

நீங்க பௌரில் இருந்தால் என்ன செய்து இருப்பீர் நீரும் உன் அப்பனும் சேர்ந்து 10 தைலைமற தோட்ட அமௌண்ட்டை வெட்டு என்று கேப்பார் உங்க மெடிக்கல் காலேஜ் அனுமதி கொடுத்ததில் நீ அடிச்ச கொள்ளை பற்றி கொஞ்சம் யோசித்து விட்டு பிறகு உன் திரு வாயை திற போவியா


M Ramachandran
மார் 31, 2025 17:11

திறமையற்ற தமிழக நிர்வாகம். இவர்கள் 2021 ஆட்சிக்கு வந்த வருடம் வட கேரளாவிலிருந்து ஒரு ஆயத்த ஆண்டாய் நிறுவனம் கேரளா காரருடையது அவர் அங்கு கம்யூனிஸ்டுக்கள் கொடுக்கும் குடைச்சலால் பக்கத்துக்கு மாநில மாகிய தமிழ் நாட்டிற்கு மற்ற நினையத்தார். நம் அரசு யாரும் அவரை அழைக்க வில்லை. இதைய கேள்வி பட்ட சந்திர சேகர ராவ் உடனே தான் முனைப்புடன் அவரைய அணுகி அந்த தொழிற்சாலையைக்கு வேணடிய எல்ல உதவிகளையும் செய்து தருவதாகா உறுதி அளித்து அந்த தொழிற்சாலையும் அங்கு சென்று விட்டது. இஙகு சாம்சங் தொழிற் சாலையும் பிரச்சனையல்ல வேறு மாநிலத்திற்கு செல்ல முடிவிடுகிறார்கள். முன்பு நோக்கியா விற்கு யேர்பாட்ட கதி தான். கணடவனெல்லாம் கைய்ய நீட்டினால் யாரால் இங்கு தொழில் நடத்தமுடியும். தவிர மின்சார இலாக்கா இது பொற்கால பல பிரசன்னைகள். தொழில் முனைவோர் ஓட்டம் பிடிக்கின்றனர். குஜராத் மாநிலம் எவ்வாறு முன்னேரி கொண்டிருக்கு? அங்கு லஞ்சம் தாலிய காட்டுவதில்லை. அல்பங்களால் தொழில் நசிக்கிறதது


venugopal s
மார் 31, 2025 15:21

எல்லா மாநிலங்களிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதனால் எல்லா முதலீடுகளும் ஒரே மாநிலத்துக்கு வருவது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!


vivek
மார் 31, 2025 16:33

ஏல வேணு, அப்போ தமிழ்நாட்டு அப்பா வேஸ்டா ??


sridhar
மார் 31, 2025 19:42

முதலீடு வந்தால் ஆகா ஓஹோ , முதலீடு போனால் வறட்டு தத்துவம் . 200 ஓவாக்கள் பாடு கஷ்டம்.