உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்ததாரர்கள் உழைப்பால் தமிழகம் மாறியுள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

ஒப்பந்ததாரர்கள் உழைப்பால் தமிழகம் மாறியுள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சென்னை, ஆக. 29- “ஒப்பந்ததாரர்கள் உழைப்பால், அதிநவீன கட்டமைப்புகள் கொண்டதாக தமிழகம் மாறியுள் ளது,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின், இரண்டாவது மாநில மாநாடு மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திரங்களின் வர்த்தக கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இவற்றை துவக்கி வைத்து, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: அரசின் வாக்குறுதிகளை செயல் வடிவமாக்குவதும், காகிதங்களில் வரைபடமாக இருக்கும் திட்டங்களை, ஏழு சாலைகளாகவும், மேம்பாலங்களாகவும் மாற்றி காட்டுவதும் ஒப்பந்ததாரர்கள் தான். அவர்களின் உழைப்பால், அதிநவீன கட்டமைப்புகள் கொண்டதாக தமிழகம் மாறியுள்ளது. வழிகாட்டி வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில் துவங்க முதலில் வரும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்குள்ள உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு வசதிகள், நாட்டிற்கே வழிகாட்டியாக உள்ளன. நெடுஞ்சாலைத் துறை, 37 கோடி ரூபாயில், கன்னியாகுமரியில் கண்ணாடி மேம்பாலம் கட்டி உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு மேல், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. மதுரை கோரிப்பாளையம், வேலுார் சத்துவாச்சேரி உட்பட பல்வேறு இடங்களில், 100 ஆண்டுகளுக்கு தேவையான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், 2021ம் ஆண்டு வரை 1,074 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே நெடுஞ்சாலைத் துறையில் இருந்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஒப்பந்ததாரர் பதிவு எளிமையாக்கப்பட்டது. புதிதாக 1,300 பேர் இதனால், நான்கு ஆண்டுகளில், 1,300 ஒப் பந்ததாரர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் கோரிக்கையை ஏற்று, ஐந்தாண்டு கால பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தை பல உயரங்களுக்கு, முதல்வர் கொண்டு செல்வார். அதற்கு அனைத்து துறை ஒப்பந்ததாரர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பேசியதாவது: மாநில நெடுஞ்சாலை துறை வாயிலாக, 68,180 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 820 கி.மீ., சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 2,020 கி.மீ., சாலைகள் இரண்டு வழித்தடமாகவும் மாற்றப்பட்டு உள்ளன. போனஸ் மேலும், 1,197 தரைப்பாலங்கள், உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டு உள்ளன. குறித்த காலத்தில் பணி முடிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு, 1 சதவீதம் போனஸ் வழங்கப் படுகிறது. 'பசுமையான சாலைகள், பாதுகாப்பான பயணம்' என்பதை இலக்காக வைத்து, ஆண்டுதோறும் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். மூன்று ஆண்டுகளாக கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. இதை ஒப்பந்ததாரர்கள் சமாளிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஒப்பந்த விலைப்பட்டியல் உயர்த்தி தரப்படுகிறது. பீஹார் சென்று வந்ததால், முதல்வருக்கு சிறிய உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், அவரால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Yasararafath
ஆக 29, 2025 11:14

எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே.


Tetra
ஆக 29, 2025 07:56

உண்மைதான். நன்று இருக்க வேண்டியது இந்த ஆட்சியில் குட்டிச்சுவராகியிருக்கிறது


Svs Yaadum oore
ஆக 29, 2025 06:43

ஒப்பந்தக்காரர்களால் அமைச்சர்கள் எல்லாம் நல்ல பணம் சம்பாதித்தனர்.... அமோக விளைச்சல்.....அது மட்டும் இல்லை ...இந்த ஒப்பந்தக்காரர் என்பதே அமைச்சர் பினாமி கம்பெனி தான் .....ஒப்பந்தம் அரசு சார்பில் கொடுப்பதும் இவனுங்கதான் .....அதை வாங்குவதும் இவனுங்க கம்பெனிதான்...ஒப்பந்தம் இவனுங்க கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ப ஒப்பந்த நிபந்தனைகள் மாற்ற படும் ...அமைச்சர் , அதிகாரிகள் என்று பயங்கர கொள்ளை ....


raja
ஆக 29, 2025 06:25

என்னமோ போடா சின்னவனே...முப்பதாயிரம் கோடி கமிஷன் வாங்கி உன் குடும்பமும் அங்கிள் குடும்பமும் தாண்டா உயர்ந்திருக்கு....


VIDYASAGAR SHENOY
ஆக 29, 2025 05:51

450 கோடி செலவு பண்ணியும் தண்ணீர் தேங்குவது ஏன் ? ஒப்பந்த தரரிடம் கொடுக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா


NATARAJAN R
ஆக 29, 2025 05:32

கண்டிப்பாக. திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்த தொகையில் பெரும் பங்கு திமுக வுக்கு வந்து விட்டது.


Mani . V
ஆக 29, 2025 04:57

ஆனால் கொள்ளையர்களால் நாட்டின் கஜானா காலி, பல லட்சம் கோடி கடன். ஆனால் கொள்ளைக்கூட்ட தலைவனின் குடும்பமும் அவர்களின் கூட்டாளிகளும் வளப்பமாக வாழ்கிறார்கள்.


rama adhavan
ஆக 29, 2025 04:41

மக்கள் பணம்தானே? மக்கள் பணத்தை செலவிடுவதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? அரசு அலுவலர்களே போதும்.


Palanisamy Sekar
ஆக 29, 2025 03:28

கமிஷன் சரியாக செலுத்தப்படுகின்றது என்று அர்த்தம் கொள்ளலாமா? 118 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் விரிசலோடு இருபப்தாக சற்று முன்னர்தான் இன்ஸ்டாகிராமில் செய்தி படித்தேன். அதற்குள் நம்ம து முதல்வர் புளங்காகிதம் அடைகின்றார் பெருமாக சொல்லி. ஆட்ச்சி மாறியதும் பட்டியலோடு வரப்போகிறது ஊழல் கட்டிடங்களும் ஊழல் தார் சாலைகளும். அப்போ இந்த து முதல்வர் சிறைச்சாலையில் இருப்பாரோ? ஆம் நிச்சயம்.


xyzabc
ஆக 29, 2025 02:48

ஒப்பந்தக்காரர்களால் அமைச்சர்கள் எல்லாம் நல்ல பணம் சம்பாதித்தனர். அமோக விளைச்சல். DMK files சினிமாவில் ஹீரோக்கள் ஆகினர்.


சமீபத்திய செய்தி