உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம்: மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம்: மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார் பேட்டையில் வீடுவீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தார்.தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில், தமிழக முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தவும், தி.மு.க., அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறவும், உறுப்பினர்களை சேர்க்கவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தன் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில் இன்று (ஜூலை 03) ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார் பேட்டையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்தித்தார். சந்தித்த பெண்களிடம் எல்லாம், பஸ்களில் இலவச பயணம் செல்கிறீர்களா என்று கேட்டார். மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.https://x.com/mkstalin/status/1940660739204960294

வெல்லட்டும்

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, ஜாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்.இதற்காக அடுத்த 45 நாட்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட்டு, தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Murthy
ஜூலை 04, 2025 16:19

ஓரணியில் தமிழகம் .....எதிரணியில் கோள்மல்புற கோஷ்டிகள்.....


Ramesh Sargam
ஜூலை 03, 2025 22:14

மக்களே ஏமாறாதீர்கள். போதும் திமுகவின் அராஜக ஆட்சி.


N Sasikumar Yadhav
ஜூலை 03, 2025 20:56

கொஞ்சங்கூட கூச்சப்பட மாட்டாரா திராவிட மாடல் மொதல்வர் . தினமும் கொலை கொள்ளை என அரங்கேறி கொண்டிருக்கிறது . அதை தீர்க்க முடியாததை மறைக்க தினமும் ஏதாவது ஒரு நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்


Bhakt
ஜூலை 03, 2025 20:11

ஓரணியில் தமிழகம்... இந்த கேடுகெட்ட ஆட்சியை அகற்ற,கேடுகெட்ட கட்சியை தொலைக்க.


Bhakt
ஜூலை 03, 2025 19:54

திருடர்கள் அணியில் தமிழகம் சேராது.


V RAMASWAMY
ஜூலை 03, 2025 19:05

நாடு பூராவும் கொடிகட்டிப் பறந்த கட்சியைத் தூக்கி எரிந்து 2014ல் காணாமல் போகச்செய்து முன்னேற்ற மாற்றம் காண வைத்த வாக்காளர்களுக்கு 2026ல் தமிழகத்தில் முன்னேற்ற மாற்றம் காண வைக்கத் தெரியாதா என்ன? அந்த அளவு அவர்களுக்குத் துணிச்சல் கிடையாதா? தீய சக்திகளுக்கு முடிவு கட்ட முடியாதா என்ன? அவ்வளவு கோழைகளா?


sankaranarayanan
ஜூலை 03, 2025 18:57

நான்கு ஆண்டு சாதனை இல்லவே இல்லை நான்கு ஆண்டு சோதனை ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் துவக்கம் என்று முன்பே பல பல புது புது வார்த்தைகள் இயற்றப்பட்டு மக்களுக்கு புளிச்சு போயிடுச்சு இனி இது போன்ற புது புது வார்த்தைகளுக்குப்பதில் செயல் முறையில் இறங்குங்கள் அடுத்து அணி இருக்கக்கூடாதா இதுதானா ஜனநாயகம்


am
ஜூலை 03, 2025 17:32

நாங்க நடிக்க ஆரம்பிச்சுட்டோம்...


V RAMASWAMY
ஜூலை 03, 2025 17:07

எதற்கும் மயங்காமல் நீங்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் ஓரணியில் திரளுங்கள், 2026ல் நல்ல பொற்கால மாற்றம் கொண்டுவாருங்கள், பொறுத்தது போதும், பொங்கியெழுங்கள்.


ram
ஜூலை 03, 2025 16:32

திமுகவில், ஹிந்துக்களை, ஒருத்தர் .....மகன்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான், ஒருத்தர் நூறு வருட ஹிந்து கோவில்களை இடித்தேன் என்று சொல்லிகிறான், ஒருத்தர் ஹிந்து அடையாளங்களை அணிய கூடாது என்று சொல்லுகிறான், ஒருத்தர் ஹிந்து மதத்தை டெங்கு, காலரா என்று சொல்லிகிரான், ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் அல்லொலியா என்று சொல்லிக்கொண்டு அலைகிறரன். இதற்கெல்லாம் காரணம் சிறுபான்மை ஓட்டுகள் இந்த கட்சிக்கு வருவதற்கு திமுகவில் இருக்கும் ஹிந்து மக்கள் இதுபோல திராவிட கட்சிகளை புறம் தள்ள வேண்டும் வரும் தேர்தல்களில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை