வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது: இப்படி படிக்கவும் "தமிழகம் கொலைகளின் தலைநகரமாகிறது"
திருநெல்வேலி: தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது. காவல்துறைக்கு எதிரான 14 தாக்குதல்கள் நடந்துள்ளன என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் கலாச்சாரம் பரவலாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நான்கு கொலைகள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60% உயர்ந்துள்ளன. பாலியல் குற்றங்கள் 53% அதிகரித்துள்ளன. தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ltof5tf8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவல்துறைக்கு எதிரான 14 தாக்குதல்கள் நடந்துள்ளன. கள்ளக்குறிச்சியில் 63 பேரும், கரூரில் 41 பேரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை தமிழக அரசு தவறாக அளித்ததால், மத்திய அரசு DPR-ஐ திருப்பி அனுப்பியுள்ளது. கோவை மெட்ரோ வரக்கூடாது என்பதற்காகத் திட்ட அறிக்கையே மாறுபடுத்தப்பட்டதுமுதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலிக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியை ஏன் நினைவுகூரவில்லை? திட்டம் நிராகரிக்கப்படவில்லை; 2026 ஜூன் மாதத்தில் கோவை, மதுரைக்கு மெட்ரோ வந்துவிடும். மின் கட்டணம் 300% உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் இலவச பயணம் தேவையில்லை; சதுர அடிக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறிய ஆட்சி அதை நிறைவேற்றவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது: இப்படி படிக்கவும் "தமிழகம் கொலைகளின் தலைநகரமாகிறது"