உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்நாட்டு பாதுகாப்பில் தமிழகம் முன்னணி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

உள்நாட்டு பாதுகாப்பில் தமிழகம் முன்னணி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' உள்நாட்டு பாதுகாப்பில், இந்தியாவிலேயே, தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது, '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழகத்தில் 1995 முதல் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயங்கரவாதிகளால் குறி வைத்து கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முஹமது அலி ஆகியோர் தலைமறைவாகினர். ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி என்ற இடத்தில், அபுபக்கர் சித்திக் மற்றும் முஹமது அலி ஆகியோரை தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.அதேபோல், கோவையில் 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்.,) புதிதாக உருவாக்கப்பட்டது.https://x.com/mkstalin/status/1943266116450816136 கடந்த 30 ஆண்டுகளாக, தமிழக போலீஸ், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் போலீஸ் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் பயங்கரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநில போலீசாருக்கும் எமது நன்றிகள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 15:09

உலகநாடுகளின் விரைவில் தமிழகம் வந்து தமிழக முதல்வரிடம் உள்நாட்டு பாதுகாப்பை பற்றி தெரிந்துகொண்டு போய் தங்கள் நாடுகளில் பாதுகாப்பை பலப்படுத்த போகிறார்கள் .. நேற்று இஸ்ரேலிய அதிபர் முதல்வரை தொடர்புகொண்டு உள்நாட்டு பாதுகாப்பு நடைமுறைகளை தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டு போனார் .. திராவிடமாடல் ஆட்சியை இஸ்ரேலில் கொண்டுவரபோவதாக அறிவித்துவிட்டார் .. ஐரோப்பியநாடுகள் ..மற்றும் ஐநா பாதுகாப்பு குழுக்கூட தமிழ்நாட்டிற்கு வைத்து முதல்வர் நடத்தும் செம்மினாரில் கலந்துகொண்டு தங்கள் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தி பயனடைய போகிறார்கள் .. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமிழ்நாட்டிற்கும் அமெரிக்காவிற்குமிடையிலான பாதுகாப்பு பரிவர்த்தனை ஒப்பந்தத்தை கொண்டுவரப்போகிறார் .. இனிஅமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பில் உலகத்திலேயே முன்னணியில் இருக்கும் .. ஸ்கட்லாண்ட் யார்ட் போலீஸ் குழு பயிற்சிபெற அறிவாலயம் வரப்போகிறது ..அவர்களுக்கு முதல்வர் நேரடி பயிற்சி கொடுப்பார் .. இதைப்பார்த்து பொறாமைபடும் இ பி எஸ் ..தினகரன் ஆபீஸ் எரிப்பு, கீழ்வெண்மணி சம்பவம் , கோயம்பத்தூர் குண்டுவெடிப்பு , 24 போலீஸ் கஸ்டடி டெத் , இந்திராகாந்தி மதுரை வந்த போது தாக்கியது , மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் சம்பவம் , குழந்தைமுதல் மூதாட்டி வரை கற்பழிக்கப்படுவது ..மதுரை லீலாவதி கொலை , போன்ற வதந்திகளை பரப்புவார் .. பொதுமக்கள் நம்பவேண்டாம் ..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 11, 2025 09:28

சட்டம் ஒழுங்கைக் கொன்று புதைத்தவர்கள்தான் இப்படிச்சொல்ல வேண்டும் .....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 07:18

முதல்வர் ஸ்டாலினுக்கு அபரிமிதமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது ..அதை இதுபோன்று பேசி வெளிப்படுத்துகிறார் .. சிரிக்க வேண்டியதுதான் வேறு என்ன செய்யமுடியும் .. கலைஞர் ஒருமுறை தான் ஊழலுக்கு நெருப்பு என்றார் ..நீதிபதி சர்க்காரியா வயிறுவலிக்க சிரித்தார் ..பிறகு இந்தியாவே சிரிக்கவில்லையா ..


Bhakt
ஜூலை 10, 2025 23:28

1991ல் தீயமுக ஆட்சி டிஸ்மிஸ் ஆனதே விடுதலை புலிகள் சுதந்திரமா EPRLF தலைவர் பத்மநாபாவை சென்னைல போட்டு தள்ளிட்டு போனாங்கன்னு தானே நைனா


Bhakt
ஜூலை 10, 2025 23:11

எப்பவுமே தீயமுக ஆட்சில தான் குண்டு வெடிப்புகள் நடக்குது நைனா


Vel1954 Palani
ஜூலை 10, 2025 23:00

வாய் சொல்லில் வீரரடி என்ற பாரதி வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடிய வில்லை. கட்டிய ஆற்று பாலம் ரோட்டில் கட்டிய மேம்பாலங்கள் எல்லாம் 3 , 6 மாதங்களில் பல் இளிக்கிது .ஆற்றில் அதிக வெள்ளம் வந்ததால் பாலம் உடைந்தது என்று பேசப்பல் பேச்சு. காண்ட்ராக்டர் தரக்குறைவாக கட்டிவிட்டான் என்று சொல்ல துப்பு இல்லை. அது சரி வேளச்சேரி பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு அகற்றியாச்சா? மழைக்காலம் வரும் முன் அரசு செய்யுமா? ஆக்கிரமிப்பு அகற்றி வெள்ள நீர் வடிய வகை செய்யுமா?


சி சொர்ணரதி
ஜூலை 10, 2025 21:51

எப்பவுமே துண்டு சீட்டை படித்தால் அப்படித்தான் நினைக்க தோன்றும்.. வீடியோ சூட் நடத்தாமல் முதல்வராக பொறுப்பை உணர்ந்து செயல்பட தெரியவில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 21:43

கோவை குண்டுவெடிப்பு நடந்ததே திமுக ஆட்சியில்தான். தடுக்கத்தவறியது உங்க கட்சிதான். . உண்மையை மறைக்க முடியாது.


Ramesh Sargam
ஜூலை 10, 2025 21:06

தினமும் பல கொலைகள். தினமும் ஒரு காவல் நிலையக்கொலை. தினமும் பல பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில். இதெல்லாம் உள்நாட்டு பாதுகாப்பா?


krishna
ஜூலை 10, 2025 20:48

ENNA KEVALAM THUNDU SEATTU EZHUDHUM AALU MUZHU MUTTALA.UL NAATTU PADHUKAPPU ENDRAAL ENNA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI ENA THURU PIDITHA IRUMBU KARAM SENGAL THIRUDAN NINAIKKIRAARGAL POLA.VITTA RANUVAME IVAR SOLLITHAAN NADAKKIRADHU ENA KADHAI VIDUVAAR.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை