உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நடத்திய போலி ஷூட்டிங் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்

தி.மு.க., நடத்திய போலி ஷூட்டிங் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:த.வெ.க., தலைவர் விஜய், களத்தில் இறங்கிய நாள் முதல், மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., அரசு, அக்கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.இந்நிலையில், த.வெ.க.,வைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைவது போன்ற ஷூட்டிங் ஒன்றை, அறிவாலய சினிமா கம்பெனி நடத்தி வருகிறது. சென்னை திருவொற்றியூரில், த.வெ.க., நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்தது போன்ற ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதில், த.வெ.க., நிர்வாகிகள், கட்சி உறுப்பினர் அட்டையை கிழிப்பது, த.வெ.க., துண்டை கழற்றிவிட்டு, தி.மு.க., துண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், த.வெ.க., உறுப்பினர்கள் யாருக்கும், இதுவரை உறுப்பினர் அட்டை வழங்கவில்லை. இதை, அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பெண்களே உறுதிப்படுத்தி உள்ளனர். அது மட்டுமின்றி, மகளிர் சுய உதவிக்குழு கடன் வாங்கி தருவதாகவும், அதற்கான கூட்டம் என அழைத்து சென்று, அந்த பெண்களை வற்புறுத்தி, தி.மு.க.,வினர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.இது, த.வெ.க., வளர்ச்சியை பார்த்து, தி.மு.க., அரண்டு போய் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. இனியாவது தி.மு.க., ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ