உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் தமிழக போலீஸ்: எச்.ராஜா

ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் தமிழக போலீஸ்: எச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்:' 'தமிழகத்தில் காவல் துறையும், ஹிந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது,'' என, பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.கரூரில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், பாஜ., கிளை நிர்வாகிகள் தேர்தல் நவ.30 வரை நடக்கிறது. டிச.1 முதல் 15 வரை நகரம், ஒன்றியத்துக்கும், 31க்குள் மாவட்டத்துக்கும் தேர்தல் நடக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் மாநில அளவிலும், ஜன., 15க்குள் அகில இந்திய அளவில் பா.ஜ., தலைவர் தேர்தல் நடக்கிறது.சமீப காலமாக, ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் தைரியமாக பரப்பப்படுகின்றன. அதை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. அதனால், மத மோதல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பாடகி இசைவாணி பாடியுள்ளார்.அவர் மீதும், இயக்குனர் ரஞ்சித் மீதும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை கஸ்துாரியை கைது செய்ததை போல, பாடகி இசைவாணி மீதும் நடவடிக்கை தேவை. ஆனால், அவரை கண்டுகொள்ளாமல் உள்ளதால், தமிழக காவல் துறையும் ஹிந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தொழிலதிபர் அதானி மீது, குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் அதானிக்கும் பிரதமருக்கும் எந்த தொடர்பும் இல்லை.அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, குற்றப்பத்திரிகையில் தமிழகம் உள்ளிட்ட, நான்கு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. அந்தந்த மாநிலங்களின் அதிகாரிகள் மீது, புகார் சொல்லப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில், நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சியில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Nallavan
நவ 27, 2024 14:56

கனா பாடகி இசைவாணிக்கு வாழ்த்துக்கள், இவர் பாடிய i am sorry Iyappa பாடல் மிகவும், இனிமையாகவும், சமூக சிந்தனையை மக்களிடையே எடுத்து சொல்லும் விதமும் மிகவும் அருமை, நன்றி


Barakat Ali
நவ 27, 2024 13:21

நடிகர் சூர்யா மும்பையில் இருக்கும் நிலையில் அவரது வீட்டுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு ..... இதுதான் துக்ளக் ஆட்சி ........


Rajkumar Ramamoorthy
நவ 27, 2024 13:16

1952 வக்ப் ஆக்ட் வெள்ளைக்காரன் எழுதினத, காங்கிரஸ்க்காரன் ஓவ்வொரு எலெக்ஷன்லயும் எழுதி குடுப்பான் அவன் வாங்கிப்பான். இவன் குடுப்பான் அவன் வாங்கிப்பான். இவன் குடுப்பான் அவன் வாங்கிப்பான். இப்போ எல்லாம் எங்களுதுண்ணுவானுக ... இதுக்கு வெங்காய போர்டுன்னு பேர் வேற. வோட்டுக்கக இந்தியா என்னமா பாடு படுது.


pmsamy
நவ 27, 2024 12:06

ஊரை விட்டு ஓடி விடு


Rasheel
நவ 27, 2024 11:50

ஹிந்துக்களின் ஒற்றுமையின்மையை ஆப்ரஹாமியம் பயன்படுத்திக்கொள்கிறது. ஹிந்து மதம் அனைத்து சாதிகளையும் சார்ந்தது. அதில் கருப்பன் முதல், சுடலைமாடன் முதல், யோகம் அளித்த சிவ பெருமான் வரை அடக்கம்.


AMLA ASOKAN
நவ 27, 2024 11:43

அஞ்சு வருசமா கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இப்ப ரத்தம் கொதிச்சு ரோஷம் பொங்கிவழிய இந்த பழைய பாட்டினால் வானமே இடிந்து ஒரு சில நூறு இந்துக்கள் மீது வீழ்ந்தது போல் கச்சை கட்டி கொண்டு இது இந்து விரோத அரசு என்று கோரும் இந்த ஆசாமி எப்படா ஏதாவது பிரச்சினை சிக்கும் என்று முதலை போல் காத்திருக்கும் சிறுபான்மையினர் மீது தீராத பகை கொண்ட நபர். மத நல்லிக்கணத்தை விரும்பாதவர் .


Sanatan, Ex Secular Hindu
நவ 27, 2024 12:07

Why are rice bags and peace fuls getting triggered? What a hateful comment...


konanki
நவ 27, 2024 11:29

தங்கள் மதத்தை நம்பிக்கை களை கடவுளை யாராவது ஒருவர் இழித்தும் பழித்தும் பேசினால்/எழுதினால்/பாடினால் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எடுக்கும் நடவடிக்கையை அனைவரும் பின்பற்றினால் இதை போன்ற விஷயங்கள் வரவே வராது.


konanki
நவ 27, 2024 11:25

மாரி தாஸ் பத்ரி சேஷாத்ரி கார்த்திக் கோபிநாத் கஸ்தூரி இவர்கள் மேல் தான் திராவிட மாடல் அரசின் நடவடிக்கை பாயும். ஜார்ஜ் பொன்னையா ஜெகத் காஸ்பர் மோகன் லாசரஸ் இந்த பாடகி மீதெல்லாம் திராவிட மாடல் அரசின் நடவடிக்கை பாயாது.


konanki
நவ 27, 2024 11:21

துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் "சனாதனத்தை ஓழிக்க வேண்டும்" என்ற அறைகூவலை அமுல் படுத்தும் விதமாக பாடல் பாடிய கிருத்துவ பாடகியின் மீது எப்படி தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கும்??


தஞ்சை மன்னர்
நவ 27, 2024 11:20

அண்ணாமலை இல்லாதது தலைப்பு செய்தில் வரும் அளவுக்கு துளிர் விட்டச்ச அண்ணன் வரட்டும் சொல்லி வைக்கிறோம்


சமீபத்திய செய்தி