உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக போலீசார் தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர்

தமிழக போலீசார் தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர்

தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. போலீசார், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர். தி.மு.க., கூட்டத்துக்கு மட்டுமே அவர்கள் செல்கின்றனர். எந்த கொள்கை உடையவராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் மரியாதை தர வேண்டும். மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சி, திராவிடத்துக்கு எதிராக போராடுவோம் என கூறி விட்டு, இப்போது, தி.மு.க.,வுக்கு அடிபணிந்து கிடக்கிறது. எம்.பி., பதவிக்காக, அக்கட்சி தலைவர் கமல், சுயநலவாதியாகி விட்டார். தி.மு.க.,வை எதிர்க்க திராணி இல்லாதவர் வி.சி., தலைவர் திருமாவளவன். வரும் 2026ல் திராவிட மாடல் வெலவெலத்துப் போகும். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூட்டத்துக்கு வருவோர் எல்லோரும் ஓட்டு போடுவார்களா என தெரியாது. தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் கடமை, விஜய்க்கும் உள்ளது. தி.மு.க.,வை எதிர்க்கும் எந்த கட்சியும் எங்களோடு இணைந்து போட்டி போடலாம். - -தமிழிசை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை