உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருத்தணி தாக்குதல் குறித்த பதிவுகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு தமிழக போலீஸ் கடிதம்

 திருத்தணி தாக்குதல் குறித்த பதிவுகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு தமிழக போலீஸ் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரயில் பயணத்தின்போது கத்தியை வைத்து, ஒருவரை தாக்குவது போன்ற வீடியோக்களை பரப்புவது, இளைய தலைமுறையினரை வன்முறையில் ஈடுபட வழிவகுக்கும். 'குற்றங்கள் நிகழாமல் தடுக்க, அதுபோன்ற இணையதள முகவரிகளை முடக்க வேண்டும்' என, 'எக்ஸ்' நிறுவனத்திற்கு, தமிழக காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு தலைமையக டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கடிதம் எழுதியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gmxxybcj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடிதத்தில் கூறப் பட்டிருப்பதாவது: ரயில் பயணத்தின்போது கத்தியை ஏந்தி, பொது மக்களில் ஒருவரை தாக்கும் வீடியோவை, சிலர் தங்கள் 'எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. பின், ஆன்லைனில் பரப்பப்பட்டது. இதுபோன்ற வீடியோக்களை பரப்புவது, இளைய தலைமுறையினரை வன்முறையில் ஈடுபட வழிவகுக்கும். இது, அமைதி, பொது ஒழுங்கு, சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். திருத்தணியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டு, விசாரணை நடக்கிறது. தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, இந்த இணையதள முகவரி, சட்ட விரோத செயலை செய்ய பயன்படுத்தப்படுகிறது. எனவே, மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க, இந்த எக்ஸ் முகவரிகளை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு கடமை இருக்கு

அரசின் அக்கறையின்மை மற்றும் நிர்வாக சீர்குலைவை அம்பலப்படுத்துவது, எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை. இந்த தோல்விகளை முன்னிலைப்படுத்துவது, தி.மு.க., அரசுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினால், அதற்கான தீர்வு, 'எக்ஸ்' நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பது அல்ல. எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்கு பதில், முதலில் தங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு வேலை செய்ய, தி.மு.க., அரசு முயற்சிக்கலாம். அண்ணாமலை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பார்த்தசாரதி
ஜன 02, 2026 18:09

முதல்லே கஞ்சா புழுக்கத நிறுத்துங்க


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2026 14:59

ரயிலில் அந்த பையன் முறைத்து பார்த்ததால் தாக்குதல்-காவல்துறை ...... முறைத்து பாத்ததால் அந்த வக்கீலை நாலு தட்டு, தட்டினோம்-திருமாவளவன் .....


Sivak
ஜன 02, 2026 14:47

அந்த வெற்றிமாறனின் சாதி வெறி படங்களை முடக்குங்க ....


திகழ்ஓவியன்
ஜன 02, 2026 12:34

கற்பனை பெருக்கெடுத்து ஓடுது


Perumal Pillai
ஜன 02, 2026 11:22

இவ்வளவு அறிவு இருக்கா?


Rathna
ஜன 02, 2026 11:11

தரம் கெட்ட சாதிய வெறி சினிமாவும், டாஸ்மாக்கும், கஞ்சா போல பல வகையான போதை வஸ்துக்கள் புழக்கமே இதற்கு காரணம் என்பதை அதில் பங்கு வகிக்கும் நபர்களுக்கு யார் எடுத்து சொல்வது.


Modisha
ஜன 02, 2026 11:08

குற்ற சம்பவங்களை தடுக்க வக்கில்லை அது குறித்த செய்திகளை தடுக்குது தமிழக போலீஸ் . சீ..


Pandi Muni
ஜன 02, 2026 09:59

பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா என்ன? தி.மு.க கோமாளிகள் கதி இனி அதோ கதிதான்


rama adhavan
ஜன 02, 2026 09:43

தானும் உண்மை செய்திகள், தாக்குதல்களை மன நோயாளி, சண்டையால் வந்தது போன்ற சரியில்லாத தகவல் தருகின்றனர். வீடியோக்களையும் முடக்க வேண்டும் என்கின்றனர். எக்ஸ் தளம் கேள்வி கேட்டால் என்ன சொல்வார்கள். உண்மை என்றா, பொய் என்றா?


கூத்தாடி வாக்கியம்
ஜன 02, 2026 09:37

அந்த நாலு பேர்ல யாராவது எலக்சன்ல நிக்கிறானோ. எதுக்கு அதை தடை செய்ய துடிக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை