உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கும் தமிழக துறைமுகங்கள்: பிரதமர் பெருமிதம்

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கும் தமிழக துறைமுகங்கள்: பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன'', என பிரதமர் மோடி கூறினார்.தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவின் கடலோர உள்கட்டமைப்பில், தூத்துக்குடி சர்வதேச கன்டெய்னர் டெர்மினல் புதிய நட்சத்திரமாக திகழ்கிறது. இந்த புதிய டெர்மினல் மூலம், வ.உ.சிதம்பரம் துறைமுகம் விரிவாக்கம் ஏற்படும். இந்த துறைமுகத்தால் செலவு குறைவதுடன், இந்தியாவின் அந்நிய செலாவவணியை சேமிக்கும்.2 ஆண்டுக்கு முன், இந்த தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறனை மேம்படுத்த பல பணிகள் துவங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப் மாதம் தூத்துக்குடி வந்த போது துறைமுகம் தொடர்பான மேலும் பல பணிகள் துவங்கின. இந்த பணிகள் விரைவாக முடிவடைவதை கண்டு மகிழ்ச்சி இருமடங்கு ஆகிறது. இந்த துறைமுகத்தில் 40 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். இந்த முனையம் கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாக மாறும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
செப் 17, 2024 07:11

எந்த ஊருக்குப் போனாலும் புகழ்ந்து தள்ளிட்டு போயிட்டா போதும்னு நினைக்கிறாரு. சாயம் ஏற்கனவே உ.பி ல வெளுத்தாச்சு.


xyzabc
செப் 17, 2024 05:12

Kani ma will put dmk stickers on all tuticorin projects even if it is nothing to do with them.


Vijay D Ratnam
செப் 16, 2024 20:59

சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் மத்தியில் இரண்டு துறைமுகங்களுக்கு இணையாக தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரை பகுதியின் மையப்புள்ளியில் அமைந்திருக்கும் காரைக்கால் அதானி துறைமுகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.சென்ற ஆண்டு மட்டும் 30 MTPA அளவுக்கு சரக்கை கையாண்டு தென்னிந்தியாவில் படு வேகமாக வளர்ச்சி அடையும் துறைமுகமாக காரைக்கால் அதானி போர்ட் விளங்குகிறது.


venugopal s
செப் 16, 2024 19:46

தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை கையாளுவது வேண்டும் என்றால் மத்திய அரசாக இருக்கலாம், ஆனால் அவைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பது தமிழக தொழில் துறை மற்றும் தமிழக ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் தான் என்பது உண்மை தானே? தமிழக தொழில் துறை முன்னேற்றம் மற்றும் பங்களிப்பு இன்றி துறைமுகங்கள் வளர்ச்சி பெற முடியாது!


Dharmavaan
செப் 16, 2024 17:19

துறைமுகம் தொடங்கிவர்களே இதற்கு காரணம்.திரட்டு திராவிடம் இல்லையென்றால் இன்னும் வளர்ந்திருக்கும்


தென்காசி ராஜா ராஜா
செப் 16, 2024 17:10

துறை முகம் மத்திய அரசு கிழ் செயல் படும் என்று கூட அறியாத...... என்னத்த சொல்ல


கனோஜ் ஆங்ரே
செப் 16, 2024 16:20

இது தமிழ்நாட்டிக்கு மட்டுமல்ல... இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு..ன்னு பிரதமரே சொல்லிட்டாரே...? இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை...


Thirumal Kumaresan
செப் 16, 2024 16:44

துறைமுகங்களை கையாள்வது மத்திய அரசா அல்லது மாநில அரசா சிந்தித்து கருத்து பதிவிடவும்


Dharmavaan
செப் 16, 2024 17:20

அந்த மூளை யிருந்தால் திராவிட கொத்தடிமைகள் இது போல் பதிவு போடமாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை