உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி நபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடம்

தனி நபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனி நபர் வருமானம் 1.96,309 ரூபாய் ஆக உள்ளது.லோக்சபாவில் மத்திய அரசு அளித்த புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 2014 -15 ல் தேசிய அளவில் தனி நபர் வருமானம் ரூ.72,805 ஆக இருந்தது. இது 2024- 25 ம் நிதியாண்டில் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது.( 57.5 சதவீதம் அதிகம்)அதேநேரத்தில் தேசிய அளவில் இந்த வளர்ச்சி சரிசமாக இல்லை.இந்த பட்டியலில் கர்நாடக மாநிலத்தின் தனி நபர் வருமானம் ரூ.2, 05,605 ஆக உள்ளது.இதற்கு அடுத்து இடத்தில் உள்ள தமிழகத்தில் தனி நபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது.ஒடிசா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானாவில் தனி நபர் வளர்ச்சி விகிதம் இரு மடங்காக அதிகரித்த நிலையில், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவானதாகவே உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு மகிழ்ச்சிஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி திமுக அரசு 2024-2025ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுநேற்று( ஜூலை 21) லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1.14.710 ஆக உள்ளது.தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழகம் ரூ.1.96,309/-பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு முதல் தமிழகம் தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Thravisham
ஜூலை 23, 2025 12:24

வருமானவரி கட்டுவதில் எத்தனையாவது இடத்தில உள்ளது?


அசோகா
ஜூலை 23, 2025 06:34

பச்சை பொய் இது


Mani . V
ஜூலை 23, 2025 04:41

இது கோபாலபுரம் குடும்பத்தை வைத்து சொல்லி இருப்பார்கள். மக்களின் வருமானம் கூடி இருந்தால் ஆயிரம் ரூபாய் பிச்சைக்கு ஸாரி இலவசத்துக்கு இப்படி அலைவார்களா? ஒருவேளை இந்த ஆயிரம் ஓவாயை வைத்து நூறு சவரன் தங்கம் வாங்க முடியும் என்று முடிவு செய்து இருப்பார்களோ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 22, 2025 23:00

டாஸ்மாக் விற்பனை அடிப்படையில் தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகமாக இருக்கலாம். தனிநபர் வருமானம் அதிகம் உள்ளதால் வரும் தேர்தலில் ஓட்டுக்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆவது தர வேண்டும். இந்த ஆயிரம் இரண்டாயிரம் எல்லாம் இனி ஒத்துக்கொள்ள முடியாது. ஸ்டார் ஓட்டல் பிரியாணி டாஸ்மாக் டோக்கன் 42 இன்ச் எல்இடி டிவி இது போல் கொடுத்தால் தான் ஏற்றுக்கொள்வோம். மகளிர் விடியல் பேருந்து இனி ஏசி பேருந்து வேண்டும்.


Natarajan Ramanathan
ஜூலை 22, 2025 22:51

தனிநபர் வருமானம் அதிகம் உள்ள முதல் பத்து மாநிலங்களில் எந்த இலவச அறிவிப்புகளும் வெளியிட உச்சா நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் தடை விதிக்க வேண்டும்.


theruvasagan
ஜூலை 22, 2025 22:12

தனிநபர் வருமானத்தில் 2ம் இடத்தில் இருக்கும் பணக்கார மாநிலத்தில் இலவசங்கள் எதற்கு.


என்னத்த சொல்ல
ஜூலை 22, 2025 21:55

செல்லாது.. செல்லாது...


ManiK
ஜூலை 22, 2025 21:20

அந்த தனி நபர் வேறு யாருமல்ல... திமுக இளவரசர், சினிமா துறை சக்கரவர்த்தி உதவாநிதியா தான் இருக்கும்.


பாமரன்
ஜூலை 22, 2025 20:52

என்னமா பகபகன்னு வயித்துல வாயில அடிச்சிக்குதுக இந்த அப்ரசண்டிக... பாவமா இருக்கு... இப்போ இருநூறு விடியல் கெக்கேபிக்கேன்னு ரெண்டு மூனு பீஸ்க வரனும்... பார்ப்போம்


vivek
ஜூலை 23, 2025 06:32

பாமரன், தலைப்புக்கும் நீ குடுக்கும் முட்டுக்கும் சம்பந்தம் இல்லையே....எதுக்கு இந்த ரீலு


theruvasagan
ஜூலை 23, 2025 10:47

உனக்கு தினசரி 200 கிடைக்குது என்கிற தெம்பில் நீ முட்டு கொடுக்கலாம். எல்லோருமே அப்படியா.


venugopal s
ஜூலை 22, 2025 20:51

ஐயோ பாவம்,இன்று சங்கிகளை ஜெலூசில் இரண்டு ஸ்பூன் எக்ஸ்டராவாக குடிக்க வைத்து விட்டார்களே!


Kumar Kumzi
ஜூலை 22, 2025 23:20

ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட


vivek
ஜூலை 23, 2025 06:33

தலைப்புக்கும் உன் கருத்துக்கும் என்ன சம்பந்தம்...


venugopal s
ஜூலை 23, 2025 09:44

தமிழ்நாடு முன்னேறுகிறது என்று சொன்னால் சங்கிகளுக்கு வயிற்றெரிச்சல் அதிகமாகி விடுகிறதே!