உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல

 தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல

தமிழகம் முழுதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக அவல நிலையில் உள்ள சாலைகளை சரி செய்ய வக்கற்று இருக்கிறது தி.மு.க., அரசு. நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை, தங்கள் கட்சி கொடிகளை நடுவதற்காக தோண்டி சேதப்படுத்துகிறது. தமிழக மக்களின் வரி பணத்தில் போடப்பட்ட சாலைகள், மக்களின் போக்குவரத்துக்காகவா அல்லது தி.மு.க., கொடி வைக்கவா? சென்னை அண்ணா சாலையில், இளைஞர் முகமது யூனுஸ், தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இளம்பெண் ஷோபனா ஆகியோர் உயிரிழந்தது வெறும் சாலை விபத்துகளால் அல்ல. தி.மு.க., அரசின் அலட்சியத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் தான். தமிழகத்தில் உள்ள சாலைகள் தி.மு.க.,வின் சொத்து அல்ல. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, உடனடியாக தி.மு.க., நிறுத்தி கொள்ள வேண்டும். சேதப்படுத்திய சாலைகளை, தன் சொந்த செலவில், தி.மு.க., சீரமைக்க வேண்டும். - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rameshmoorthy
டிச 31, 2025 14:57

Why cannot the court take Cognisance of the case and punish DMK with hefty penalty????


Vasan
டிச 31, 2025 13:22

சாலைகளில் குழி தோண்டி கொடிக்கம்பம் நடுபவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும், ஏன் என்றால் அவர்கள் சேதப்படுத்தியது பொதுச்சொத்தை.


பாலாஜி
டிச 31, 2025 11:28

இந்தியாவின் மாநிலங்கள் பாஜகவின் சொத்து இல்லை என புரியவில்லை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 31, 2025 12:57

இந்தியாவின் மாநிலங்கள் பாஜகவிற்கு சொந்தம்னு பாஜககாரன் சொல்லல அது மக்கள் சொன்னது.. தமிழகத்தின் நிலங்களை கூறுபோட்டு வித்த கழகமில்ல பாஜக.. தேசத்தை நேசிக்கும் மக்கள் பாஜகவிற்கு கொடுத்த அன்பு பரிசு!!!.


V RAMASWAMY
டிச 31, 2025 08:29

என்ன சொல்லி என்ன பயன்? ஒரே வழி 2026. அதனை வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்தாவிட்டால், தமிழர்களை வாழ்வே குண்டும் குழிதான் அப்புறம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை