உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு

உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஜிடிபி குறித்து காங்கிரஸ் நிர்வாகி கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. உபி., உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவரும், ராகுலின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, '2010ல் உ.பி.,யின் கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.'ஆனால், இப்போது கடன் வாங்குவதில் உபியை தமிழகம் விஞ்சி விட்டது' எனக்கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு திமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=satlaqna&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நிருபர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். மற்றவர்கள் கருத்து சொல்லலாம். காங்கிரஸ் தலைவரும், திமுக தலைவரும் பேசி முடிவு செய்வார்கள்.

அவசியமில்லை

ஜிடிபி குறித்து காங்கிரஸ் பிரவீன் கூறியதில் உடன்பாடு கிடையாது. இந்திய மாநிலங்களில் தமிழகம் தான் கடந்தாண்டு அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது என நிடி ஆயோக் அறிக்கை கொடுத்துள்ளது. உபி உடன் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

நிறைவேறாது

ஜிராம்ஜி என்ற வார்த்தைக்கு விளக்கத்தை சொல்ல முடியுமா? எந்த இந்தி சொற்களை அது குறிக்கிறது என சொல்ல முடஇயும். ஜி,ஆர்,எம்,ஜி என்றால் என்ன என சொல்ல முடியுமா? பல எம்பிக்கள் என்ன என கேட்கின்றனர். இந்த திட்டத்தில் குறைகள் உள்ளன. உத்தரவாதம் இல்லை. மத்திய அரசு, மாநில அரசின் உத்தரவாதம் இல்லை.மொத்த செலவில் 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என்கின்றனர். ஏற்கனவே பல மாநிலங்கள் நிதி ஆதாரம் குறைந்தவையாக உள்ளன. 40 சதவீதம் மாநில அரசின் பொறுப்பு என்றால் எந்த மாநிலத்திலும் நிறைவேறாது.பாஜ அரசு, முந்தைய காலத்தில் சராசரியாக 50 நாட்கள் தான் வேலை கொடுத்துள்ளனர். இப்போது 100 நாட்கள் கொடுக்க வழியில்லை. 125 என்கின்றனர். ஏன் அத்தோடு நிறுத்திவிட்டார்கள். 365 என சொல்ல வேண்டியது தானே. 125 சொன்னாலும் ஒன்று தான். 365 நாட்கள் என சொன்னாலும் ஒன்றுதான்.

மக்களுக்கு தெரியும்

இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி பிப்.,15ல் பேசிய பேச்சை நினைவுபடுத்துகிறேன்.'' இந்த திட்டத்தை ஏற்று கொள்ளவில்லை. ஆனால் இந்த திட்டத்தை ஒழிக்க மாட்டேன். எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்றால், திட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஐமு கூட்டணி படுதோல்விக்கு நினைவுச்சின்னமாக இந்த திட்டம் இருக்கும்'' என்றார்அவரால் நிறைவேற்ற முடியாது என்று எங்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.வேலைவாய்ப்பு திட்டத்தை அவர்கள் ஒழித்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததை காங்கிரஸ் கண்டிக்கிறது.

துணைவேந்தர் நியமனம்

பல மாநிலங்களில் துணைவேந்தர்களை அரசு நியமிக்கிறது. இங்கு கவர்னர் நியமிப்பார் என சட்டம். இதுபோன்ற கவர்னர் வருவார் என சட்டத்தை இயற்றியவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலம், கட்டடம் அரசுக்கு சொந்தமானது. ஆசிரியர்களை அரசு நியமிக்கும்போது துணைவேந்தர்களை ஏன் அரசு நியமிக்கக்கூடாது.மத்திய பல்கலைக்கு மத்திய அரசு தானே துணைவேந்தரை நியமிக்கிறது. இங்குள்ள பல்கலைக்கு துணைவேந்தர்களை ஏன் மாநில அரசு நியமிக்கக்கூடாது. இதற்கு கவர்னர், ஜனாதிபதி பதில் சொல்லவில்லை. காலத்துக்கு ஏற்ப சட்டத்தை மாற்ற வேண்டும்

பென்சன் திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது வாஜ்பாய் அரசு. இதனை ஐமு அரசு அறிமுகம் செய்தது. மத்திய அரசு ஊழியர்கள் போராடிய போது ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை மோடி அரசு நியமித்தது. அக்குழு பலரின் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், புதிய பென்சன் திட்டம் வேண்டும் என்றால் அதில் தொடருங்கள். மாற்றாக ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் அறிமுகம் செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை மோடி அரசு அமல் செய்து வருகிறதுதற்போது, தமிழகத்தில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு நேற்று அறிக்கை கொடுத்துள்ளது. அரசின் அறிக்கை வரட்டும். மோடி அரசு அமல் செய்கின்ற புதிய திட்டத்தை ஒட்டி தான் தமிழக அரசு அறிக்கை இருக்கும் என நினைக்கிறேன் யூகிக்கிறேன். பார்க்கலாம்.

பழக்கம்

திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக ஒரு பழக்கம் இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுக்கு முன்பு வந்த செய்தி கூடபத்திரிகையில் வந்துள்ளது. எந்த பழக்க வழக்கங்கள் வழிபாடு நிலையங்களில் இருக்கிறதோ அதை மாற்ற முயற்சி செய்யக்கூடாது. தொன்று தொட்டு எந்த பழக்க வழக்கம் இருக்கிறதோ அதை கடைபிடிக்கவேண்டும் என்பது எனது கருத்து.

மக்கள் முடிவு

விஜய் எதிர்க்கட்சி தலைவராக வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.யார் எதிர்க்கட்சியாக வந்தால் என்ன?ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இருப்பது தான் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி, என்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்.மற்ற கருத்துகள் மிகைப்படுத்துப்படுகிறது எனது கருத்து மிகைப்படுத்தப்படலாம். எனது கருத்து பயனே கிடையாது.திமுக தலைவர் காஙகிரஸ் தலைவர் எடுப்பது தான் நிலைப்பாடு. முடிவு.தனிப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ,நபர்கள் தங்களது கருத்துக்களை சொல்லாம். பேச்சுரிமை உள்ள கட்சி. முடிவு எடுப்பது திமுக, காங்கிரஸ் தலைவர் எடுப்பது தான் முடிவுதனி மனிதனின் பேச்சுரிமை வேறு. கட்சியின் முடிவு வேறு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

கண்ணன்
ஜன 01, 2026 07:06

யோக்கின் வந்துட்டார்.. சொம்பை எடுத்து உள்ளே வை என்றுதான் சொல்ல வேண்டும்.


நாநி
ஜன 01, 2026 03:02

உனக்கு எதுலதா உடன்பாடு?? ஊழல் ஒன்றுலதான்!!!


பேசும் தமிழன்
டிச 31, 2025 21:37

உபி மக்கள் தொகை தமிழகத்துடன் ஒப்பிடும் போது எத்தனை மடங்கு அதிகம் ....அப்படி பார்த்தால் .....தமிழ்நாட்டை விட உபி மாநிலம் தானே அதிகம் கடன் வாங்கி இருக்க வேண்டும் ??


RAMAKRISHNAN NATESAN
டிச 31, 2025 20:20

பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் தனது மகளை தனது சகோதரனின் மகனுக்கு திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவல்பிண்டியில் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று ராவல்பிண்டியில் நடைபெற்றதாக தகவல்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 31, 2025 22:52

சிதம்பரத்திற்கு ஞாபகப்படுத்த இந்த தகவலாக?


Chandru
டிச 31, 2025 19:42

சிதம்பரம் சார் . நீங்கள் இனி ஒய்வு எடுக்க வேண்டிய முதியவர். வீணாக பேசி கொண்டிருக்க ப்டாது .


SUBBU,MADURAI
டிச 31, 2025 21:12

அவர் ஓய்வெடுக்க வேண்டியது வீட்டில் அல்ல என்பது மட்டும் உறுதி!


Venugopal S
டிச 31, 2025 19:31

ப சிதம்பரம் இப்படி எல்லாம் அறிவுபூர்வமாக பேசினால் புரியாது!


சிட்டுக்குருவி
டிச 31, 2025 19:31

ஐயா நீங்கள் சொல்வது உண்மைதானுங்க .தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது .அரசு சொத்துக்களை அபகரிக்கும் கொள்ளை கூட்டத்தையெல்லாம் என்கவுண்டர் மூலமும் ,சிறையடைப்பு மூலமும் உபி தீர்த்துக்கட்டிவிட்டது .வளங்கள் எல்லாம் அரசு கருவூலத்திக்கு வருகின்றது .இங்கு கொள்ளைகள் தீர்ந்தப்பாடில்லை .4720 கோடி ஆட்சியாளர்களின் பினாமிகளுக்கும் வெறும் 36 கோடி மட்டுமே அரசு கருவூலத்திற்கு வருகின்றது .வளங்களை கொள்ளையடிப்பவர்கலை தடுப்பவர்கள் லாரி ஏற்றி கொலைசெயகின்றார்கள் .அரசு சொத்துக்களை களவாடிவிட்டு மாநிலத்திற்கு வருமாணவேண்டி சாராயம் விற்பதாக கூறி ஆளுபவர்களே சாராய ஆலைகளை ஏற்படுத்தி சாராயத்தை விற்று கிழ்நிலையில் உள்ள ஒரு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டு இந்தியாவுக்கே மாதிரியான மாநிலமென்று இறுமாப்பு கொள்கின்றார்கள் .உங்களைப்போன்ற படித்தவர்களும் அவர்களுக்கு கைகொட்டி ஆரவாரம் செயகிண்றீர்கள் .மறுசுதந்திரம் வேண்டி மக்கள் தவிக்கின்றார்கள் .


Barakat Ali
டிச 31, 2025 19:04

ரீ கவுண்ட்டிங் ஆளுங்க சொல்றதை நாங்க நம்புறதே இல்ல ....


Sathyan
டிச 31, 2025 18:57

PC worried about his RS seat and the MP seat for KC. People know that all the borrowings of TN government are for schemes and capital expenditure and these funds are getting robbed through corruption in high places. If DMK elected to power again, it will not only ruin the economy by pushing the borrowings by another 100%, emptying the treasury to harvest votes from women, deny salary and retirement benefits to government employees, deny employment to the corporation house keeping/sweeping staffs but also push TN behind by another 100 years. Hope and pray God that DMK should not come to power again


spr
டிச 31, 2025 18:54

"எனது கருத்து பயனே கிடையாது" இவர் சொன்னதிலேயே உண்மையான வார்த்தைகள் இவையே "பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்." குறள் எண் 191 கேட்போர் அனைவராலும், வெறுக்கத் தக்க வகையில், பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான். மகனுக்கு சட்ட சபை தனக்கு ராஜ்ய சபை காங்கிரசில் வாய்ப்பில்லை கழகம் காக்குமோ அப்பதவிக்காகவா இந்த கூப்பாடு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை