உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை; முதல் 100 இடங்களில் 6 பேர்!

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை; முதல் 100 இடங்களில் 6 பேர்!

புதுடில்லி: நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள் இடம் பெற்று அசத்தி உள்ளனர்.இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்.டி.ஏ.,) இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f6dy9n0n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* 551 முதல் 600 மதிப்பெண்கள் வரை 10,658 மாணவர்கள் பெற்றுள்ளனர்.* 601 முதல் 650 மதிப்பெண்கள் வரை 1,259 மாணவர்கள் பெற்றுள்ளனர்.* 651 முதல் 686 மதிப்பெண்கள் வரை 73 மாணவர்கள் பெ ற்றுள்ளனர்.தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் எழுதினர். இவர்களில், 76,181 பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.தமிழக மாணவர்கள் சாதனை 6 தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 27வது இடமும் பிடித்துள்ளார்.* அபிநித் நாகராஜன்- 50வது இடம்* புகழேந்தி- 61 வது இடம்* ஹிருதிக்- 63வது இடம்* ராகேஷ்- 78வது இடம்* பிரஜன் ஸ்ரீவாரி- 88வது இடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 15, 2025 09:59

அரசியல்வாதிகளின் தூண்டுதல்களால் ...நம்பிக்கை இழந்துவிடாமல் ..தன்னம்பிக்கையுடன் படித்து தேர்வுபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன் ...நீக்கலாவது நீட் தேர்வின் அவசியத்தை மற்றவர்களுக்கு சொல்லுங்கள்


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 00:12

நீட்டை ஒரு அரக்கனாக சித்தரித்த திமுக இப்போது பல் இளிக்கிறது. இதே போல் கோட்டாவின் போலிமுகமும் விரைவில் உடைபடும்.


எஸ் எஸ்
ஜூன் 14, 2025 20:31

தமிழ்நாட்டு மாணவ மணிகளின் மைண்ட் செட் நீட் தவிர்க்க முடியாதது என்று மாறி விட்டது. இதை புரிந்து கொண்டு திமுக நீட் எதிர்ப்பு ட்ராமாவை பரணில் போட வேண்டும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 15, 2025 09:55

கழகத்தினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் என்னாவது ..வருமானம் என்னாவது ...இப்படியே எல்லோரும் நீட் தேர்வில் வெற்றிபெற்றால் ...


venugopal s
ஜூன் 14, 2025 20:09

மத்திய பாஜக அரசின் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வாழ்த்துக்கள்!


Sridhar
ஜூன் 14, 2025 19:22

இவனுக நடத்துற மருத்துவ கல்லூரிகள்ல சட்டவிரோத செயல்கள் என்ன நடக்குதுன்னு யாராவது ஆய்வு செய்யணும். நிச்சயமா பலகோடி லாபகரமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும். அதை மறைக்கத்தான் நீட் மூலம் "வெளியாட்கள்" தகுதி அடிப்படையில் உள்ளே வருவதை திருட்டு கும்பல் எப்படியாவது நிறுத்தமுடியுமானு பாக்குது. டாஸ்மாக்குக்கு சமமான விசயம் எதோ ஒன்னு ஓடிட்டு இருக்கு. அதுனாலதான் திருட்டு கும்பல் நீட் நீட் னு இன்னிக்குவரை புலம்பி கொண்டு இருக்கிறது.


D.Ambujavalli
ஜூன் 14, 2025 18:30

வெற்றிபெற்ற மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள் . வரும் ஆண்டுகளில் இன்னும் பலர் தேர்வில் வென்று neet பரீட்சையை ஒழிக்க சபதம் எடுத்து, கையெழுத்தெல்லாம் வாங்கியவர்கள் முகவரியைக் காணாமல் போக செய்யுங்கள் தமிழ் மாணவ குலமே...


V.Mohan
ஜூன் 14, 2025 17:48

மருத்துவத்துக்கு படிக்கறதுக்கு அறிவுத்திறனும் அர்ப்பணிப்பு உணர்வுமே தேவை. அப்படி இருந்தால் வெற்றி உறுதி. சும்மானாச்சும் சுற்றி இருக்கிறவங்க உசுப்பி விடறதால மருத்துவம் படிக்கணும் ஆசைப்பட்டால் ரொம்ப கஷ்டப்படணும். அரசு வேலையில சேர்ரதுக்கு ஏன் தேர்வாணையம் ஏற்படுத்தி தேர்வு நடத்தறீங்க முதல்வரே சமச்சீர் சிலபஸ்ஸ்ல படிச்சு அதிக மார்க்கு எடுத்தவங்களுக்கு நேரா தரலாமே. மருத்துவப்படிப்புக்கான உண்மையில் அறிவுத்திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டியது அரசின் கடமை. ஏனென்றால் மக்களின் உயிரைக்காக்கும் பொறுப்பு மருத்துவர்களின் திறமையில் தான் உள்ளது. மருத்துவ படிப்புக்கான திறன் குறைந்தவர்களுக்கு மாற்று படிப்புக்களுக்கான வழியை அரசு ஏற்பாடு செய்தால் மோகம் குறையும். தேர்வு,மார்க், ஊழல்கள் தமிழ்நாடு தேர்வாணையத்திலும் உள்ளது. நீட் தேர்வில் மட்டும் உள்ள மாதிரி பரப்புரை செய்வதை திமுக நிறுத்தினால் நல்லது. தமிழ்நாட்டு மாணவர்கள் வாழ்க


நாஞ்சில் நாடோடி
ஜூன் 14, 2025 17:43

தி மு க வின் நீட் வாக்குறுதியை மதிக்காமல் கண்டுகொள்ளாமல் கடினமாக உழைத்து படித்து வெற்றி பெற்ற தமிழக மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...


Barakat Ali
ஜூன் 14, 2025 17:31

திமுகவின் சாயம் எப்போதோ வெளுத்துவிட்டது ......


sankaranarayanan
ஜூன் 14, 2025 17:23

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இன்றுமுதல் திராவிட மாடல் அரசு தமிழகத்தில் எந்த எந்த முடுக்கு மூலைகளிலும் யாராவது ஒரு பெண்ணோ ஆணோ தானாகவே அல்லது வேறு எதோ காரணங்ககால் இறந்துவிட்டால் அவர்களை நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் மாண்டு விட்டார் என்று மார்த்தாட்டி அடுத்த தேர்தலுக்கு இப்போதிலிருந்தே கூவுவதற்கு ஆயத்தம் ஆகிவிடுவார்கள்


புதிய வீடியோ