உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க நிதியின்றி தமிழக அணி வீரர்கள் தவிப்பு

தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க நிதியின்றி தமிழக அணி வீரர்கள் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய அளவிலான, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'யூ - 20' சுவாமி விவேகானந்தா கால்பந்து தொடரில், தமிழக அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும், 28ம் தேதி, 'சுவாமி விவேகானந்தா யூ -20' என்ற தேசிய கால்பந்து போட்டி துவங்க உள்ளது. இதில், தமிழகம் சார்பில் பங்கேற்க, கால்பந்து வீரர்கள் தயாராக உள்ளனர். இவர்கள் போட்டியில் பங்கேற்க குறைந்தது, 4.50 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், தமிழக கால்பந்து சங்கத்தில் போதிய நிதி இல்லை. எனவே, போட்டியில் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, தமிழக கால்பந்து சங்கத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் நிதி உதவி அளிக்கவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குளறுபடி

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதை, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெற்றுத்தர வேண்டும். ஆனால், தமிழ்நாடு கால்பந்து சங்கத்தில் ஏற்பட்ட குளறுபடி, நீதிமன்ற வழக்கு போன்றவை காரணமாக, நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து அமைப்பின் செயலர் சண்முகம் கூறியதாவது:

தேசிய அளவிலான, 'யூ-20 சுவாமி விவேகானந்தா கால்பந்து' போட்டியில் பங்கேற்க, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நிதி வழங்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக, எந்த நிதியும் வழங்கவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நிதி இல்லாததால், தமிழக அணி போட்டியில் பங்கேற்காது என்று அறிவித்தும், அவர்கள் எந்த உதவியும் செய்ய தயாராக இல்லை.

அரசு உதவி

எனவே, சொந்த செலவில், தமிழக அணியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் நிதி கேட்டுள்ளோம், அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒவ்வொரு விளையாட்டிலும், 20 வயதுக்கு உட்பட்ட பிரிவு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அரசு தரப்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், இந்த பிரிவில் சாதிக்கும் வீரர்களுக்கே வழங்கப்படுகின்றன. அரசு பணிகளும், இதில் சாதிக்கும் வீரர்களுக்கே வழங்கப்படும். எனவே, எங்கள் சங்கத்தில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டாமல், இளம் கால்பந்து வீரர்களின் வருங்காலத்தை கருத்தில் வைத்து அரசு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.'முடிந்த உதவியை செய்வோம்'இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு கால்பந்து சங்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், சங்கம் இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்க, அந்த சங்கம் சரியாகச் செயல்பட வேண்டும். அதற்கான தலைவரின் முயற்சியால் மட்டுமே அது சாத்தியமாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு கீழ் செயல்படும், அனைத்து சங்கங்களுக்கும், எல்லா வகையிலும் உதவி செய்யப்படுகிறது. எங்களால் முடிந்த அனைத்து உதவியையும், நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். கால்பந்து சங்கத்தில் ஏற்பட்ட குளறுபடியை, நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எந்த பிரிவுக்கும் சாதகமாக ஆணையம் செயல்படாது. எங்களால் முடிந்த உதவியை செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

shyamnats
ஏப் 24, 2025 11:37

ஆண்களுக்கும் இலவச பஸ் சேவை வருது . அப்புறம் போலாம்.


lana
ஏப் 24, 2025 11:29

இங்கு gst என்று புலம்பும் முட்டுகளுக்கு ஒரு செய்தி. நேற்று வணிக வரித்துறை 4 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி தமிழக அரசு வரி வசூலித்து உள்ளது என்று பெருமை பேசி வருகிறார். ஆனால் கவனமாக வணிக வரி என்று மட்டுமே கூறி உள்ளார். அது தான் gst. இவர்கள் வசூலிப்பார்கள் ஆம் ஆனா மத்திய அரசு தரவில்லை என்று பொய் சொல்ல வேண்டியது. இதுக்கு தான் சமச்சீர் murasoli மட்டுமே படிக்க கூடாது. போய் google இல் தேடி பாருங்கள். tamilnadu GST Act 2017 என்று ஒரு சட்டம் உள்ளது. அதை மாநில அரசு தான் செயல்படுத்தி வரி வசூல் செய்கிறார்கள்


Yes your honor
ஏப் 24, 2025 10:21

தலைவர்கள் தான் எங்குமே பிரச்சனை. சரியில்லை என்றால் தூக்கி எறிந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தானே. நிதியில்லை, அது இது என்று. நிதி இருந்திருந்தால் இதுவரை சும்மா இருந்திருப்பார்களா, கூடுவாஞ்சேரியில் ஒரு இரண்டு ஏக்கர் கிஃப்டு செய்திருக்க மாட்டார்களா?


Murugan Guruswamy
ஏப் 24, 2025 10:03

மாநில அரசு கபடி, உதை பந்து போன்ற விளையாட்டை உக்குவிக்காமல், கிரிக்கெட், செஸ் போன்ற சொப்லங்கி விளையாட்டை முன்னிலை படுத்து கிறது


Murugan Guruswamy
ஏப் 24, 2025 10:00

ஜி எஸ் டி என்ற பெயரில் ஒன்றிய அரசு கொள்ளை அடித்து பிமாறு மாநிலத்தில் கொட்டு கிறது, அப்பறம் எப்படி பணம் வரும்


Kumar Kumzi
ஏப் 24, 2025 08:43

தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் தானே இருக்கு முடிந்தவரை கஜானாவை காலிபண்ண முடிவு பண்ணிட்டானுங்க விடியா மூஞ்சி ஆட்சி


selvelraj
ஏப் 24, 2025 08:34

இப்படியே தொடர்ந்து மறக்காமல் திராவிட மாடல் ஆட்சிக்கே ஓட்டு போடுங்கள், தமிழகம் எல்லா துறைகளிலும் விளங்கிடும். கள்ளச்சாராய சாவுக்கு தலைக்கு 10 லட்சம் கோடி கணக்குல செலவு செய்து மொண்டேகார்லோ இணையாக மவுண்ட் ரோடில் கார் ரேஸ் நடத்த காசு இருந்துச்சு ஆனால் யாருக்கு அதனால் பயன்?


S.V.Srinivasan
ஏப் 24, 2025 08:21

எதுக்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்ல அதிகாரிகளை நல்லாவே ட்ரைனிங் கொடுத்து வச்சுருக்குப்பா திராவிட மாடல் அரசு.


VENKATASUBRAMANIAN
ஏப் 24, 2025 08:21

எங்கே போனார் உதயநிதி. இதை கவனிக்க வேண்டும்


S.V.Srinivasan
ஏப் 24, 2025 08:19

விளையாட்டு துறை மந்திரி என்ன செய்யறாரு ? சிங்கள் ஆளா பாகிஸ்தான்ல கிரிக்கெட் விளையாடி கோப்பை வாங்கிவந்த டுபாக்குறோட போட்டோக்கு போஸ் கொடுத்த அப்பாக்கும், புள்ளைக்கும், இவர்கள் புலம்பல் கேட்கவில்லையா??


முக்கிய வீடியோ