உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் அமைதியாக இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் அமைதியாக இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யு.ஜி.சி., விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடி தாக்குதல். மத்திய பா.ஜ., அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும். கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பா.ஜ., அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும், கவர்னரின் கட்டளைக்கு ஏற்ப இருக்கக்கூடாது.கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது, அதிக உயர்கல்வி நிறுவனங்கள் கொண்ட மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் தமிழகம் அமைதியாக இருக்காது.கல்வி என்பது நமது அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் இருக்கும் பிரிவு. யுஜிசி.,யின் இந்த நடவடிக்கை ஒரு தலைபட்சமானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகம் போராடும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Ram Moorthy
ஜன 08, 2025 09:40

திருட்டு மாஃபியா கும்பல் தலைவன் சொல்லும் அநீதி விஷ சாராயம் குடித்து பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள் இதற்கு என்ன ஆநீதி தீர்ப்பு என்ன சொல்ல போகிறார்


vijai
ஜன 08, 2025 09:30

திமுக ஆட்சியை விட்டு இறங்கினால் தமிழகம் அமைதி பூங்காக விளங்கும்


K V Ramadoss
ஜன 08, 2025 03:40

இப்போது ?


ஆரூர் ரங்
ஜன 07, 2025 22:18

ஒரே விஷயத்தில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் சட்டம் இயற்றினால் மத்திய சட்டம் மட்டுமே செல்லும் என்கிறது அரசியல் சட்டம். அதனை ஸ்டாலின் எழுத்துக் கூட்டியாவது படித்துப் பார்க்கட்டும்.


தமிழன்
ஜன 07, 2025 21:36

ஆமாம்.. முதல்வர் சொல்வது சரி.. நிர்வாக திறமை இல்லாமல் முதல்வர் ஆட்சி செய்ய வேண்டும். அப்போ தான் திமுக அரசியல் வரலாற்றில் இருந்து அகற்றப் படும். திமுகவை அழிக்க வேறு யாரும் வர வேண்டியது இல்லை. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மட்டுமே போதும். துணைக்கு துணை முதல்வர் இருக்கிறார். என்று மக்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதி கட்டி வளர்த்த கழகம் இன்று கலை இழந்து இருக்கிறது


மோகன்
ஜன 07, 2025 21:24

ஸ்டாலின் துக்ளக் ஆட்சியில் என்றுமே தமிழகம் அமைதியாக இருக்காது.


நிக்கோல்தாம்சன்
ஜன 07, 2025 20:55

படிக்கும் வாய்ப்பிருந்தும், படிக்காதவர்களெல்லாம் உயர்கல்வி துறையை குறிவைப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல சார்


Ramesh Sargam
ஜன 07, 2025 20:23

இப்பமட்டும் என்ன வாழுது? இப்ப என்ன தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதா? எங்கு பார்த்தாலும் குற்றச்செயல்கள் தலைவிரித்து தாண்டவமாடுகிறது - ஆளும் கட்சியின் ஆசீர்வாதத்துடன். என்னமோ தமிழகம் அமைதியாக இருக்காதுன்னு சொல்லவந்துட்டார்.


GMM
ஜன 07, 2025 20:23

தமிழக மாநிலம் உரிமைகள் போல் பிற மாநிலங்களுக்கும் இருக்கும். பல்கலை துணை வேந்தர் நியமனம், நீட்டிப்பு எதுவும் மாநில அதிகாரத்தில் வராது . நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பு உண்டு. கல்வி மக்களால் தேர்வு செய்த மத்திய அரசு கையில் தான் உள்ளது. பிஜேபி ,திராவிட விருப்பம் போல் கல்வி இருக்க கூடாது. தமிழகத்தில் உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம். மாணவர்கள் இல்லாத கல்லூரியும் அதிகம். ஏழை மாநிலத்திற்கு விலையில்லா கல்லூரிகளை ஒப்படைக்கவும்.


தமிழ்வேள்
ஜன 07, 2025 20:11

கல்வானில் பாரத ராணுவம் சீனர்களை வெளுத்தது போல ஆணி அடிக்கப்பட்ட குண்டாந்தடி இரும்பு ஆணிகள் வெல்டு செய்யப்பட்ட இரும்பு தண்டுகளை கொண்டு திருட்டு திராவிட கும்பலுக்கு பூசை வெளுத்து வாங்கினால் சாதா அமைதி மட்டுமல்ல மரண அமைதியே ரொம்ப நாளைக்கு தமிழகத்தில் நிலவும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை