உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஆண்டில் தமிழக மின் நுகர்வு 23,013 மெகா வாட்டாக உயரும்

2 ஆண்டில் தமிழக மின் நுகர்வு 23,013 மெகா வாட்டாக உயரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தமிழக மின் நுகர்வு, வரும் 2026 - 27ல், 23,013 மெகா வாட்டாக அதிகரிக்கும்' என, மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. அதற்கு ஏற்ப சீராக மின் வினியோகம் செய்ய, கூடுதல் மின் வழித்தடம் அமைக்கும் பணியை விரைவாக செயல்படுத்தும்படி, மின் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக மின் நுகர்வு, தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட காரணங்களால், ஆண்டு தோறும் மின் நுகர்வு அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், அந்த காலத்தில் மின் நுகர்வு, உச்ச அளவை எட்டுகிறது. கடந்த மே 2ல், மின்நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தமிழகத்தில் மின்சாரம் கிடைத்தாலும், மின்சாதன பழுதால் மின் தடை ஏற்படுகிறது. மத்திய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையின்படி, 2026 - 27ல், தமிழக உச்ச மின் தேவை, 23,013 மெகா வாட்டாக இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, சீராக மின் வினியோகம் செய்வதற்கு, கூடுதல் மின் வழித்தடங்களை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தென்மாநில மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒரு மாநிலத்தில் மின் நுகர்வு எவ்வளவு அதிகரித்தாலும், அதை பூர்த்தி செய்வதற்கான மின்சாரம் கிடைக்கும்.கடந்த 2016 - 17ல் தமிழக உச்ச மின் நுகர்வு, 14,823 மெகா வாட்டாகவும்; 2021 - 22ல், 16,891 மெகா வாட்டாகவும் இருந்தது. இது, 2026 - 27ல், 23,013 மெகா வாட்டாக அதிகரிக்க உள்ளது. கடந்த ௧௦ ஆண்டுகளில், கூடுதலாக 8,190 மெகா வாட் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.இனி மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும். எனவே, அதிகரிக்க உள்ள மின் நுகர்வை பூர்த்தி செய்யவும், சீராக மின் வினியோகம் செய்யவும், கூடுதல் மின் வழித்தடங்கள் அமைக்குமாறு மின் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை