உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசால் தமிழக நிதி நிலை மோசம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசால் தமிழக நிதி நிலை மோசம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சேலம்: திமுக அரசு தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலை மோசமாகிக் கொண்டிருப்பதாக பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.ஓய்வு பெற்ற போலீசார் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. இதில் 61 பேர், குடும்பத்துடன் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.ஆயிரம் வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதிநிலையை காரணமாக காட்டியுள்ளது. இதே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். இதற்கு நிதி நிலை சீராக இல்லை என்று காரணம் சொல்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் திமுக அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை இதனால் 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீத தொகை திமுக ஆட்சியில் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் வெறுமனே பஞ்சப்பாட்டு பாடுவதே திமுக.,வினரின் செயலாக உள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தின் நிதி நிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதே வேகத்தில் சென்றால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 வருடங்களில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும்.இந்திய அளவில் மிகக் குறைவான அன்னிய முதலீடு தமிழகத்திற்குத்தான் வந்துள்ளது. முதல்வர் துபாய்க்கு சென்று வந்த பிறகு 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடே இன்னும் வரவில்லை. இதில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 5 லட்சம் கோடி ருபாய் முதலீடு வரும் என்பதை ஏற்க முடியாது.சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்னை விசாரணைக்கு அழைத்தால் சந்திக்கத் தயார். இன்னும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய கவனத்திற்கு வரும் அனைத்து முறைகேடுகளையும் மக்கள் முன்பு வைப்பதே என் வேலை. ஏற்கனவே, கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின்போது, அது பயங்கரவாத செயல் என்பதற்கான ஆவணத்தை நான் வெளியிட்டேன். தவறை வெளிப்படுத்துவதற்காக திமுக அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்கத் தயாராக உள்ளேன்லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக மத்திய குழு கூடி முடிவெடுத்து அறிவிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் இருகரம் கூப்பி நான் வரவேற்பேன். சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rajarajan
ஜன 06, 2024 06:32

நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மட்டும் இழுத்துமூட / தனியாருக்கு கொடுக்க எந்த ஆளும் கட்சியும் நடவடிக்கை எடுக்கவே எடுக்காது. அல்லது அதுபற்றி எந்த கட்சியும் வாயே திறக்காது. இந்த அடிப்படை நிர்வாக சீர்கேடு தெரியாத எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன ?? மத்திய / மாநில பா. ஜ.க. வுக்கும் இது பொருந்தும். சும்மா மைக் முன்னால் சவுண்ட் கொடுத்தால் மத்திய / மாநில அரசுகளின் நிதிநிலை சீராகிவிடுமா என்ன ??


K.Ramakrishnan
ஜன 05, 2024 23:51

தமிழ்நாடு கடனாளியாகி விட்டது என்று கவலைப்படுகிற அண்ணாமலை, இந்திய நாட்டைப் பற்றி கவலைப்படுவதேகிடையாது. மோடி ஆட்சியில் இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா? 2023 மார்ச் நிலவரப்படி ரூ.152,61,122.12 கோடி. மார்ச் 2024 நிலவரப்படி மொத்த கடன் ரூ.169,46,666.85 கோடியாக உயரப்போகிறது. அப்படின்னா...ஒட்டுமொத்த இந்தியாவை கடனாளி ஆக்கியது மோடி அரசு தானே...அதுபற்றியும் பேசுங்கள் சார்...


R. Vidya Sagar
ஜன 05, 2024 22:09

No. 1 மாநிலம் என்று சும்மாவா சொன்னார்?


K.n. Dhasarathan
ஜன 05, 2024 21:17

ஐயா அண்ணாமலை நீங்களே சொல்லிவிட்டீர்கள் தி. மு க அரசு அதிகமாக கடன் வாங்குகிறது, உண்மைதான், ஆனால் ஏன் கடன் வாங்குகிறது ?, அந்த நிலைமைக்கு யார் காரணம் ? உங்கள் பொய் ஜே பி அரசுதான், இங்கிருந்து ஒரு ரூபாய் வரி போனால் திரும்ப 24 பைசா தான் திரும்ப கிடைக்கிறது, பொய் ஜே பி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்கிறது, U.P அரசுக்கு 2 ரூபாய்க்கும் அதிகம், M.P. அரசுக்கு 1.55 ரூபாய் இதைப்போல செய்தால் அவர்கள் தானே வளருவார்கள், தமிழ் நாட்டை முடக்குவதையே தன வேலையாக செய்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர், ஒரு கேள்வி, யார் காசை எடுத்து யாருக்கு கொடுப்பது ? யார் வீட்டு பணம் ? உங்களுக்கு உதய நிதி ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல, நிதி அமைச்சர் தான் " இந்தியாவின் பேரிடர் " என்று சொன்னால் சரிதானே .


கனோஜ் ஆங்ரே
ஜன 05, 2024 19:38

////திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் திமுக அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது/// சாமியோவ்.. தமிழ்நாடாவது இவ்வளவு வாங்கியிருக்கு...? உன்னோட முதலாளி என்னென்ன வாங்கியிருக்கிறார்...னு அடுத்த ஆட்சி அமையும்போது தெரியும். சரி, கடன் வாங்கியிருக்கார். வாங்குன அந்த கடனை ஏழையெளிய மக்களுக்கு, கொடுக்கிறார்... ஆனால், உன்னோட ஆளு... அதானி போன்ற கிட்டதட்ட ஒரு பத்து பதினைந்து கோடீஸ்வரர்களுக்கு.... வாங்குன இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாய தள்ளுபடி இல்ல பண்றாரு...? \


ராஜேந்திரன்,கமுதி
ஜன 05, 2024 20:24

இந்த அறிவாலய அடிமைகள் எல்லாம் உடனே அம்பானி அதானியை பற்றி பேச ஆரம்பித்து விடுவான்கள் அவர்களின் தொழிலே அவர்களுடைய மூயாதையர் வழி வந்த மூலதனம் ஆனால் புதிய கோடீஸ்வரர்களான முரசொலி மாறனின் மகன்களுக்கு ஓங்கோலில் ஏதாவது ஒரு சொந்த சொத்தாவது இருக்கிறதா? அப்பறம் எப்படி உலக கோடீஸ்வரர்கள் ஆனார்கள்?


mindum vasantham
ஜன 05, 2024 19:00

Paathi Amaicharkal jailil siraichaalai arasu endre alaikkalaam


J.Isaac
ஜன 05, 2024 18:30

இந்தியாவின் கடன் 154 லட்சம் கோடி


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 18:22

மாநில நிதி அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி பற்றி தெளிவாக கூறி விட்டார்,


கனோஜ் ஆங்ரே
ஜன 05, 2024 19:41

கிராமப்புற பழமொழி மாதிரி... “அடுத்தவன் வீட்டு நெய்யே... எம் பொண்டாட்டி கையே”...ங்கற கதையா.... நல்லவன் சேர்த்து வச்சத, நாற வாயன்களுக்கு அள்ளி கொடுத்திட்டிருக்காங்களே....?


Sathyasekaren Sathyanarayanana
ஜன 05, 2024 21:16

செத்த கார்த்திக் / மும்பை கொத்தடிமை உங்களுக்கு மனசாட்சியே கிடையாத?


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 18:20

கடந்த பத்து ஆண்டுகளில் BJParty வாங்கிய கடன் மட்டும் 110 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். உலக அளவில் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமாக கடன் வாங்கிய நாடு இந்தியா மட்டும் தான். இது எதனை பேருக்கு தான் தெரியும் ?


ramesh
ஜன 05, 2024 19:57

இதோடு அரசின் பொது துறை நிறுவனங்களை அதானிக்கு விற்றதையும் சேர்த்து கொள்ளுங்கள்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 05, 2024 21:18

ரமேஷ் நஷ்டத்தில் இருந்த பொது துறை தானே விற்றார்கள், நீயும் இரண்டை வாங்கி போட்டிருக்கலாம்? டெலிபோன் லைன் திருடிய கூட்டத்திற்கு சோம்பு தூக்கும் நீ அதானி பற்றி பேச தகுதி இல்லாதவன். இட ஒதுக்கீடு என்று தகுதி இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்து, பதவி உயர்வு கொடுத்தால் ஊத்தி மூடி போகாமல் எப்படி.


Sivak
ஜன 05, 2024 21:52

அடிமையே அந்த மாதிரி விஷயம் உனக்கு மட்டும் தான் தெரியும்... அது பொய்யின்னும் தெரியும்... கடனை திரும்ப அடைத்த விஷயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. தெருக்கோடியில் நின்றுகொண்டு குலைக்க தான் தெரியும்...


ரவி
ஜன 05, 2024 18:18

உண்மைதான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி