உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடில்லி: ' திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,'யும் என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகளை வழங்குகிறது.விருதாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை ஆகியவை, டில்லியில் நடக்க உள்ள விழாவில் வழங்கப்படும். அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. ' திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908' என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.புத்தகம் பற்றி1908 மார்ச் 13ல் வ.உ.சி., கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆங்கிலேய அரசு, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது.அதற்கு முன்போ பின்போ சுதந்திர போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.

முதல்வர் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக SwadeshiSteam நூலை ஏஆர் வெங்கடாசலபதி கொண்டு வந்துள்ள வேளையில், அவரது 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' நூல் #SahityaAkademi விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது! கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Subramanian
டிச 19, 2024 07:11

வாழ்த்துகள், பாராட்டுகள்


Barakat Ali
டிச 18, 2024 17:21

வ உ சி க்குச் சேரவேண்டிய பணத்தை ஆட்டையைப் போட்டவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதா ??


வால்டர்
டிச 18, 2024 16:35

பாராட்டுக்கள்


Sidharth
டிச 18, 2024 16:24

இந்த போராட்டத்தில் தனது சொந்த மத மக்களை கடவுள் இருக்கும் கோவிலுக்குள் வரக்கூடாது என் கூறிய கூட்டம் ஈடுபட்டாதா


ஆரூர் ரங்
டிச 18, 2024 17:41

யாரைச் சொல்லுகிறீர்கள் எனப் புரிகிறதா? போன ஆண்டு சேலத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டிய சேலம் தெற்கு தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளரையா ?.ஐயோ பாவம்.


Sidharth
டிச 18, 2024 18:53

இல்லை ஜி இளையராஜாவை அர்த்த மண்டபத்துக்கு வெளியே தள்ளிய கூட்டத்தை என்னுடைய மூளை உட்பட வர்ணம் சாதி என்னும் விஷத்தை ஏற்றிய கூட்டத்தை சாதுர்வர்ணம் மயாஸ் ரிஷ்டம் என்று புரியாத மொழியில் எழுதி வைத்து ஊரை ஏமாற்றும் கூட்டம் நியோகத்தில் பிறந்த கூட்டம்


Govind
டிச 18, 2024 16:20

நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். எதிர்கால சங்கதியினர் உணர வேண்டும் இம் மாதிரி மா மனிதர்களை.


Sundar R
டிச 18, 2024 16:16

அகிலன் அவர்களின் வரிசையில் அமர்ந்து சாகித்திய அகாடமி விருது பெறும் நூலாசிரியர் திரு. வெங்கடாஜலபதி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். திராவிட துர்நாற்றம் இல்லாத எந்த படைப்பிலும் அரசியல் இருக்காது, பொய் கருத்துக்கள் இருக்காது. மக்களை ஏமாற்றும் நோக்கம் இருக்காது. வியாபார நோக்கம் இருக்காது. அது போன்ற புத்தகங்கள் படிப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதற்கு தங்கள் படைப்பான இந்நூலே சிறந்த சான்று.


Sampath Kumar
டிச 18, 2024 15:54

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அய்யாவை பற்றி இங்கே உள்ள தமிழர்களும் வடக்கன் களும் உணரும் வைகையில் இந்த புத்தகம் வந்து உள்ளது நன்றிகள்


Barakat Ali
டிச 18, 2024 16:56

வ உ சி தமிழகம் முழுவதும் தமிழர்களால் அறியப்பட்டவர் ..... இந்தியா முழுவதும் படித்தவர்களால் அறியப்பட்டவர் ..... அவர் குறித்து தமிழனுக்கும், வடக்கனுக்கும் சொல்லத் தேவையில்லை ...


முக்கிய வீடியோ