உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர்நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் வழக்காடும் மொழியாக மாறும்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் வழக்காடும் மொழியாக மாறும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி : 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசினார்.தேனி சட்டக்கல்லுாரியில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நடந்தது. போட்டி நிறைவு, பரிசளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், 'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் எழுதப்பட்ட காரணத்திற்காக தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது வரலாறு. தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தில் '4 பி' என்ற பிரிவு சேர்க்கப்பட்டு தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி சுவாமி,' நீதிபதிகள் விரும்பும் மொழில் தீர்ப்பு எழுதாலம்' என சுற்றறிக்கை அனுப்பினார். அதைத்தொடர்ந்து பெரும்பாலான நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு எழுதுகிறார்கள்.தமிழகத்தில் உயர்நீதிமன்றம் தவிர பிற நீதிமன்றங்களில் தமிழ் வழக்கு மொழியாக உள்ளது. தமிழ்மொழி உயர்நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக மாறும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.மாணவிகள் அதிகம் சட்டம் படிப்பது மகிழ்ச்சி. சட்டத்துறையில் முதன்னை பொறுப்புகளில் பெண்கள் பெரிய அளவில் அங்கம் வகிக்கிறார்கள். நீதிபதி தேர்வுகள் முடிவில் வென்றவர்களில் 245 பேரில் 128 பேர் பெண்கள். முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணாசாண்டியை மாணவர்கள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றார்.மாநில தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியில் விழுப்புரம் சட்டக்கல்லுாரி முதல்பரிசும், சேலம் சட்டக்கல்லுாரி 2ம் பரிசு பெற்றன. விழாவில் மாநில சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, சட்டக்கல்லுாரி முதல்வர்கள் சண்முகப்பிரியா (தேனி), துர்கா லட்சுமி (சேலம்), ராமபிரான் ரஞ்சித்சிங்(காரைக்குடி), சிவதாஸ்(தர்மபுரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sahayadhas
பிப் 18, 2024 13:29

தமிழிக்கு தமிழ்நாட்டில் இக்கேடா


ஆரூர் ரங்
பிப் 18, 2024 10:19

பெரும்பாலான வக்கீல்களின் பிரச்னை ஆங்கில அறிவு குறைவு என்பதை விட சட்ட அறிவே கேள்விக்குறியது???? என்பதுதானே?


ஆரூர் ரங்
பிப் 18, 2024 10:18

பெயரே இன்னும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றுதானே உள்ளது ????? பெயரையே மாற்ற இயலாத நிலையில் தமிழில் வழக்காட ஆசையா?


Dharmavaan
பிப் 18, 2024 09:29

ithu arasiyal stunt


அப்புசாமி
பிப் 18, 2024 07:41

அப்போ இன்னிவரை சினிமால காட்ட்ற தமிழ் கோர்ட் சீன் எல்லாம் நிஜம் இல்லியா கோவாளு?


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 09:03

உன் திராவிட மாடலின் கையாலாகாத்தனத்தை எண்ணி வெட்கப்படு .....


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 09:41

அதுதான் எழுபதாண்டுகளாக இதைச் செய்ய முடியாத திராவிட மாடலின் அவலம் ......


Duruvesan
பிப் 18, 2024 07:09

AI technology வந்தாச்சு. எவன் எந்த மொழில பேசினாலும் எல்லோரும் சொந்த மொழில கேட்கலாம். இவனுங்க எப்பவும் போல உருட்டல். கேவலம் புடிச்சவனுஙக. தமிழ் னு கூவும் இவனுங்க விடியலுக்கு ஏன் தமிழ் பெயர் இல்லை. விடியல் குடும்பம் மொத்தம் சமஸ்கிரத பெயர், விடியல் குடும்ப பிசினஸ் மொத்தம் தமிழ் பெயர் இல்லை, கேட்பாணுனாக?


R.RAMACHANDRAN
பிப் 18, 2024 07:01

தமிழில் வழக்காடினாலும் ஆங்கிலத்தில் வழக்காடினாலும் நீதிபதிகள் இந்திய அரசியல் அமைப்பையும் சட்டங்களையும் மதித்து அவற்றிற்கிணங்க தீர்ப்பு வழங்காதவரை சாமான்ய மக்களுக்கு பயன் ஒன்றும் இல்லை ஆளுக்கு தன்குந்தார்போலவும் லஞ்சத்திற்கு தகுந்தாற் போலவும் தீர்ப்பு வழங்கும் இன்றைய நிலையில்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ