உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்; 24 மணி நேரமாகியும் நடவடிக்கை இல்லை; அறப்போர் இயக்கம் காட்டம்

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்; 24 மணி நேரமாகியும் நடவடிக்கை இல்லை; அறப்போர் இயக்கம் காட்டம்

சென்னை: 'சவுக்கு சங்கர் மற்றும் அவரது தாயார் மீதான வன்முறை மற்றும் அருவருப்பான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்' என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சவுக்கு ஷங்கர் மற்றும் அவரது தாயார் மீதான வன்முறை மற்றும் அருவருப்பான தாக்குதலை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இப்படி ஒரு இழிவான செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dx3y26t6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் கூட தாக்குதல் மற்றும் இந்த இழிவான செயல்களை செய்தவர்கள் மீது நாம் எந்தவித சட்ட நடவடிக்கையும் பார்க்கவில்லை என்றால் அரசுக்கும் அரசில் இருக்கின்ற அதிகாரம் படைத்தவர்களுக்கும் இந்த தாக்குதலிலோ அல்லது தாக்கியவர்களை காப்பற்றுவதிலோ பங்கு உள்ளது என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் தமிழக அரசு நம்மை ஒரு அநாகரீகமான சமூகத்தை நோக்கி எடுத்து செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் வன்முறையையும் வீடு புகுந்து சேதப்படுத்துவதையும் ஊக்குவிப்பது போல் உள்ளது. வன்முறை/பொருள் சேதம் செய்பவர்களை காப்பாற்றுதல், பேச்சுரிமை கருத்துரிமையை முடக்குதல் போன்ற அரசின் தொடர் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை துளி அளவும் தமிழக அரசும், போலீசாரும் மதிப்பதில்லை என்பதை காட்டுகிறது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் அதன் மூளையாக செயல்பட்டவர்கள் மீதும் அவர்களை காப்பாற்றும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மீதும் கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கத்தரிக்காய் வியாபாரி
மார் 25, 2025 19:18

கொண்டுபோய் மலபெருந்தகை வீட்ல கொட்டி பாருங்க.. காவல்துறை ஒரு மணிநேரத்தில் கண்டுபுடுச்சுடும்


konanki
மார் 25, 2025 17:58

தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்து ஊரில் இருக்கற அத்தனை பட்டியல் இன மக்களின் ஊட்டுக்கு சப்ளை செய்ஞ்சவங்களேயே 3 வருஷமா கண்டு பிடிக்கல. ஏதோ ஒரு ஊட்ல போய் மல ஜலம் கொட்டிவனங்களை 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கணும் ன்னு சொல்ற இந்த கூரூப் என்னா அக்ரூம்பு செய்து???


vee srikanth
மார் 25, 2025 18:48

தம்பிய கூட கண்டு பிடிக்கலை


தமிழ்வேள்
மார் 25, 2025 19:53

ஸ்ரீ காந்த் ஜி.. இந்த திராவிட ஸ்வானங்களுக்கு தெரிந்த தம்பியே வேறு.


konanki
மார் 25, 2025 17:54

இவரும் ஓரு முன்களப்ஸ் தானே..மத்த முன்களப்ஸ் மாதிரி ஓரு 200/300 , காக்கா பிரியாணி, குவார்ட்டர் வாங்கினு எந்த கொம்பும் குறை சொல்ல முடியாது என்று கூவதறதை உட்டு பெரிய அப்பா டக்கர் மாதிரி உண்மை பேசினா?


konanki
மார் 25, 2025 17:47

ரொம்ப கவனமாக இருங்க டிராமா துப்புரவு பணியாளர்கள் அடுத்த ஆட்டம் உங்கள் அலுவலகம் மற்றும் உங்கள் நிர்வாகிகள் ஊட்ல. பினாயில், ஃபளீச்சீங் புவுடர் ஆஸிட், இரும்பு பிரஷ் எல்லாம் ரெடி செய்து வச்சீடீங்களா??


Sudha
மார் 25, 2025 17:19

அறப்போர் லாங்குவேஜ் பிரமாதமாக இருக்கே, இதுக்கு முன்னபின்ன யாருக்கு போராடி இருக்காங்க


Lkanth
மார் 25, 2025 16:42

கட்சிக்காரர்கள் உடந்தையுடன் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்புகின்றனர்.


கோமாளி
மார் 25, 2025 16:32

நாளைக்கு நமக்கும் நடக்கும் என உணர்ந்தவர்கள் சவுக்கு பக்கம் நிற்கிறார்கள்


R.MURALIKRISHNAN
மார் 25, 2025 15:41

அரசாங்கம் அனைத்திலும் தகுதியற்ற நிலையில் உள்ளது. கலைத்து கவர்னர் ஆட்சி ஏற்படுத்தவும்


ramesh
மார் 25, 2025 18:15

உண்மை தான் மத்தியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்


visu
மார் 25, 2025 19:07

அதற்கான எல்லா தகுதிகளும் தி மு க அரசுக்கு இப்ப கிடைத்து விட்டது


தேவராஜன்
மார் 25, 2025 15:11

திராவிஷ ரவுடிகளை ஆதாரத்துடன் ரவுடிகள் என்று பேசினால் குற்றமா? பல ஆயிரம் கோடிகளை அநியாயமாகச் சம்பாதிக்கும் ரவுடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு. இது தான் கலி காலம் என்பதோ?


kamal 00
மார் 25, 2025 14:34

வேஸ்ட் அரசாங்கம்.... செயலை செய்தவர்கள் அரசின் நிழலில் இருக்கிறார்கள்


P. SRINIVASAN
மார் 25, 2025 15:20

UP ல புல்டோஸிர் விடறவன் எல்லாம் சுதந்திரமா சுத்துறான். உச்ச நீதி மன்றம் எச்சரித்தலும் அவர்கள் நிறுத்த தயாராக இல்லை. அத கேட்க மாட்டிங்களா?


சமீபத்திய செய்தி