உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொம்மை உற்பத்தியை துவக்கியது டான்சி

பொம்மை உற்பத்தியை துவக்கியது டான்சி

சென்னை:குழந்தைகள் விளையாடும் பொம்மை, கல்வி உபகரணங்கள் உற்பத்தியை, தமிழக அரசின், 'டான்சி' நிறுவனம் துவக்கியுள்ளது . தமிழகத்தில் மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட மரச்சாமான்கள் மற்றும் இரும்பு சாமான்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், 'டான்சி' எனப்படும், தமிழக சிறு தொழில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டில் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, அவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், நம் நாட்டில் குழந்தைகளுக்கான பொருட்களுக்கு, தேவை அதிகம் உள்ளது. எனவே, குழந்தைகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரம்பரியமான பொம்மை பொருட்கள், தொடக்கப் பள்ளி, மாற்றுத்திறனாளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் ஆகியோருக்கான, அறிவியல் மற்றும் கணித பாடங்களை, சிறப்பு நோக்கமாக கொண்ட, கல்வி உபகரணங்கள், ஆகியவற்றை தயாரிக்க, டான்சி நிறு வனம் முடிவு செய்தது. இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சென்னை கிண்டியில் உள்ள, டான்சி தொழிற்கூடத்தில் நிறுவப்பட்டு உள்ளன. அங்கு தற்போது, பொம்மை உள்ளிட்ட குழந்தைகளுக்கான பொருட்கள் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளன. நிறுவனம் தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை