டாஸ்மாக்கில் ரூ.27,000 கோடி இழப்பு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணி இடங்கள் மற்றும் கல்லூரிகளில் முதல்வர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. ஏ.எஸ்.சி.ஆர்., தரவரிசை பட்டியலின் படி, அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 75 சதவீதம் பேருக்கு, இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடியவில்லை. தமிழ் கூட படிக்கத் தெரியாத சூழல் உள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடம் கிடையாது. 'டாஸ்மாக்'கில் மட்டும் 27,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுத்தால், ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கலாம். தமிழகத்தில் குற்றங்கள் 75 சதவீதம் அதிகரித்துள்ளன. கோவில்களில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. - சூர்யா, இளைஞரணி தலைவர், தமிழக பா.ஜ.,