உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7p3npgnh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாநில அரசின் அனுமதியின்றி பி.எம்.எல்.ஏ., சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Chinnamanibalan
மார் 20, 2025 11:26

ஒரு சாதாரண பெட்டிக் கடையில் கூட, விற்பனை பொருட்களுக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டும் என்பது அரசின் விதி. அதுபோல ஓட்டல்களில் சாப்பிடும் சாதாரண இட்லிக்கு கூட, ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்கூடாக காணலாம். ஆனால் அன்றாடம் பல ஆயிரம் கோடிக்கு மது வணிகம் செய்யும் அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், விற்பனை பொருளுக்கு விலைப்பட்டியலும் இல்லை. நுகர்வோருக்கு பில் வழங்குவதும் இல்லை. பில் வழங்காத நிலையில், ஜிஎஸ்டி போன்ற வரி பிடித்த விவரமும் அறிய முடிவதில்லை. இந்த சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் கோடி கணக்கிலான மது வியாபாரம், நேர்மையாக நடக்கிறது என யாரும் துணிந்து கூற இயலாது. எனவே டாஸ்மாக் நிறுவனம் முதலில் நேர்மையான வணிகம் நடத்துகிறதா என்பதை நீதிமன்றம் முறையான ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம் ஆகும்.


Appa V
மார் 20, 2025 21:41

டாஸ்மாக் சரக்குகள் GST வரிவிதிப்பில் இல்லை ..Excise Duty தான் .கோர்ட்டார் வேற்று கிரகங்களிலிருந்து கோர்ட் நேரத்துக்கு வந்துட்டு போயிடுவாங்க ..இந்த கிரகத்தில் நடப்பது அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை


R.P.Anand
மார் 20, 2025 09:28

இந்தா கிளம்பிடஅயிங்கல்ல ..


Kasimani Baskaran
மார் 20, 2025 04:06

எந்ததிருடன் என்னை வந்து உடனே பிடி என்று மனுக்கொடுப்பான்? ஆகவே இது பாஜகவின் சதி என்றுதான் சொல்லவேண்டும்.


Appa V
மார் 19, 2025 22:36

அமலாக்கத்துறை கேவியட் file பண்ணலாமே


Murugesan
மார் 19, 2025 22:35

சென்னை திராவிட நீதி மன்றம் தடை கண்டிப்பாக கொடுக்கும்,,நேர்மையான நீதிபதிகள், உலகமாக அயோக்கியர்களை பாதுகாப்பாக காக்கும் , தமிழக காவல்துறை, நீதித்துறை அயோக்கிய அரசியல்வாதிங்களை விட மிக மோசமான நிலையில்


Oru Indiyan
மார் 19, 2025 22:33

எந்த நீதிபதி வர போறாரோ.. ஆனாலும் ரொம்ப அராஜகம். ஒரு அமைப்பு விசாரணை செய்வதை தடை செய்ய வேண்டுமாம். கூண்டோடு சிறைக்கு அனுப்பினாலும் கூட புத்தி வராது. வாக்கு அளித்த சொரணை இல்லாத வாக்காளர்களுக்கும் அறிவு இல்லை


Yes your honor
மார் 19, 2025 22:21

அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகுந்து நீங்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது மட்டும் ஞாயமோ? திஹார் ஜெயிலில் உள்ள சமையல்காரர்களுக்கு பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி என்று டிரெயினிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மாமே. எவ்வளவு கூட்டம் வந்தாலும் அந்த சமையல்காரர் சமாளிக்க ரெடியாம்.


C V MANIVANNA MADHAVAN
மார் 19, 2025 22:04

இந்த வழக்கிற்கு செலவு துறையோடதா இல்லை டாஸ்மாக் சொந்த பணமா?


வாய்மையே வெல்லும்
மார் 19, 2025 22:01

நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன் என்போர்ஸ்மென்ட் ஆளுங்க வருந்தபோது . சின்னவரை டபுள் ஸ்ட்ராங் வீரன் மதுக்கொண்டு அழைக்க சொல்லு ங்களேன் .. அவர் தான் பாயும் புலி ஆயிற்றே. அவரோட இஞ்சி தின்ற குரங்கு முகரைய பார்க்க தமிழக மக்களுக்கு ஆவல் .


ஆரூர் ரங்
மார் 19, 2025 21:47

முன்னமே வளைகாப்பு மந்திரி சரக்குக் கம்பெனி வருமான விவரத்தில் சந்தேகம் உள்ளதாக வாயைவிட்டார். அப்போ எந்த தைரியத்தில் தொடர்ந்து பிராடு செய்தார்கள்?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை