உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ரெய்டு விவகாரம்; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

டாஸ்மாக் ரெய்டு விவகாரம்; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட, 20 இடங்களில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.இதனிடையே, அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: அமலாக்கத்துறை, எந்தவொரு மாநிலத்திலும், விசாரணை நடத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அமலாக்கத்துறை எந்தவொரு ஒப்புதலையும் பெறவில்லை. சோதனை நடவடிக்கை என்ற போர்வையில், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தி உள்ளனர்.பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத் துறையின் ஈ.சி.ஐ.ஆர்., எனும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க, அமலாக்கத் துறைக்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.இந்த மனுக்கள், இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு காரணங்கள் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் தரப்பு வாதிட்டது. அப்போது, இரவு நேரங்களில் சோதனை நடத்தவில்லை என்றும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை முன்வைத்தார். இதனை கேட்ட நீதிபதிகள், 'டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. சோதனைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,' என்று உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 101 )

Ramesh Sargam
மார் 25, 2025 20:26

குடிப்பவர்களின் உயிரை குடிக்கும், பெண்களின் தாலிகளை அறுக்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் இந்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் இத்தனை ஆதரவா...? தமிழ் நாடு விளங்கினாமாதிரிதான் ...


W W
மார் 23, 2025 10:07

பணம், பணம், பணம்,பத்தும் செய்யும் அந்த ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.


R.Natatarajan
மார் 21, 2025 12:11

எதிர்பார்த்த தீர்ப்பு கடவுளே வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது


k.v.krishnaswami
மார் 21, 2025 06:54

உயர் நீதிமன்ற நீதிபதிகள் திமுக போட்ட பிச்சையில் தானே....ஆர்.எஸ்.பாரதி சொன்னது.


PARTHASARATHI J S
மார் 21, 2025 05:41

கலிகாலமப்பா.


Iyer
மார் 20, 2025 21:43

திருடனின் சம்மதம் பெற்றுத்தான் திருடனை சோதனை செய்யணுமா?? பெரும் பணம் கைமாறி இருக்கு.


D Natarajan
மார் 20, 2025 20:33

கேடு கெட்ட நீதி துறை. நாடு கெட்டு குட்டிச்சுவராகி விடும். வாழ்க நீதி துறை


enkeyem
மார் 20, 2025 19:50

இனிமேல் தேச விரோத சக்திகளான தீவிரவாத கும்பல்களிடமும் விசாரணை நடத்த முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிப்பு கொடுத்து விட்டு தான் சொல்லவேண்டுமா யுவர் ஹானர்? அப்படியானால் விசாரணை நடத்த அமலாக்கத்துறை எதுக்கு ?


vbs manian
மார் 20, 2025 19:27

பற்றி எரிகிறது. நடவடிக்கை எடுத்தால் தடை போடுகிறார்கள். இந்த நாடு உருப்படாது.


Narasimhan
மார் 20, 2025 18:59

டாஸ்மாக் பார்கள் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.


புதிய வீடியோ