வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறப்பான கூட்டணி , வெற்றி நிச்சயம் , வாழ்க .
சென்னை:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தனது வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்தளித்தார்.தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட இருப்பதை, அமித்ஷா தனது, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட பிறகு, கிண்டியில் உள்ள ஐ.டி.சி., சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு, பழனிசாமி சென்றார். அமித்ஷாவை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தினார். அதன்பின் பத்திரிகையாளர் சந்திப்பில், இருவரும் கூட்டாக கூட்டணியை அறிவித்தனர்.அதன்பின் அமித்ஷா, பசுமைவழிச் சாலையில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அமித்ஷாவுடன் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோர் சென்றனர். பழனிசாமி உள்ளிட்ட, அ.தி.மு.க., தலைவர்களுடன், சிறிது நேரம் உரையாடி விட்டு, அமித்ஷா புறப்பட்டு சென்றார்.
சிறப்பான கூட்டணி , வெற்றி நிச்சயம் , வாழ்க .