உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவியை காதலிக் க தொந்தரவு கொடுத்த ஆசிரியரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மாதர்சூடாமணி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் முகிலன்,30; தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், அதே பள்ளியில் பிளஸ்1 படிக்கும் 17 வயதுடைய மாணவியை கடந்த 3 மாதங்களாக காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், முகிலன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை