உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க உத்தரவு

காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க உத்தரவு

சென்னை: 'மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் போது, அதன் தரத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் அரசு நடுநிலை பள்ளியில், நேற்று முன்தினம் காலை, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரவா கிச்சடியில், பல்லி செத்து கிடந்துள்ளது. இதனால், உணவை சாப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சமையலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றிக்கை: காலை உணவு சமைக்கும் சமையலறையில், சமையலுக்கான பொருட்களை தவிர, பிற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். சமையலறை துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.சமையல் பாத்திரங்கள், உணவு பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்னும், பின்னும், நன்கு சுத்தம் செய்ய வேண்டும் . சமைத்த உணவை மாணவர் களுக்கு பரிமாறுவதற்கு முன், அந்த உணவு தர மானதா என, ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்த்து உறுதி செய்ய வேண்டும்.சமையல் செய்யும் போதும், சமைத்த பின்னும், பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடி வைத்த நிலையில், உணவு பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

manian
செப் 27, 2026 14:00

Thank god they did not ask the teachers to cook the food.


SUBRAMANIAN P
செப் 26, 2026 13:48

பள்ளிகளை 24X7 இயங்க வைத்து மாணவர்களுக்கு காலை முதல் இரவு வரை விதம் விதமான உணவு வகைகளை சமைத்து போட்டு வைத்துக்கொண்டால் வரும் தலைமுறை நன்றாக வரும். ஆக மொத்தத்துல நல்ல கல்வியை மாணவர்களுக்கு போதித்து அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதற்கு முயற்சி செய்வதாக தெரியவில்லை.. சமூக நல விடுதியில் மாணவர்கள் மாட்டுக்கறி கேட்கிறார்கள். இதுபோல்தான் இருக்கும் வருங்கால நிலைமை. வெளங்கும்,


RAVINDRAN.G
செப் 26, 2026 10:59

அரசு வழங்கும் உணவை சாப்பிட்டு பார்த்தால் தான் தரம் புரியும். நல்ல முயற்சி.


Sesh
செப் 26, 2026 09:42

முட்டாள்தனமான உத்தரவு


V Venkatachalam, Chennai-87
செப் 26, 2026 09:35

அதுனாலென்ன? அவருக்கு மட்டும் நல்லா பண்ணி குடுத்துட்டா போச்சி. சாப்பாடு விஷயத்துல அவரும் ஒரு மாணவன் ஆயிடுவாரு.


Chandhra Mouleeswaran MK
செப் 26, 2026 09:05

பாடம் நடத்தரீங்களான்னு கேட்ராதீங்க கைடு, இண்ட்ட்ர்நெட், ஸ்மார்ட் ஃபோன் எல்லம் எதுக்கு இருக்காம்? அப்பரம் இன்னொண்டு இருக்கிலே? எங்களுக்கு நடத்தத் தெரியணும்லெ?


T.Senthilsigamani
செப் 26, 2026 07:44

காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க உத்தரவு - எங்க வீட்டுக்காரம்மா சமைத்த சாப்பாட்டை விட நல்லா தான் இருக்கு - இப்படிக்கு பரிசோதித்த ஆசிரியர்கள் மைண்ட் வாய்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை