உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் பட்டமளிப்பு விழாவில் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் பட்டமளிப்பு விழாவில் வலியுறுத்தல்

திருநெல்வேலி:''மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்,'' என, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் திருவனந்தபுரம் தேசிய புவி அறிவியல் ஆய்வு மைய இயக்குனர் என்.வி.சலபதிராவ் பேசினார்.திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலையில், 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் ரவி, 571 பேருக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார். என்.வி.சலபதிராவ் பேசியதாவது:நாட்டில், 1,500 ஆண்டுகளுக்கு முன் தட்சசீலா பல்கலையும், நாளந்தா பல்கலையும் சிறந்த உயர் கல்வி வழங்கி, இந்தியாவை கல்வியில் உலகின் முன்னணி நாடாக்கின. சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்திய பல்கலைகளில் பயின்றனர். நம் கலாசாரம், பண்பாடு அவர்களுக்கு கற்றுத்தரப்பட்டது. ஆனால், சமீப காலமாக இந்திய பல்கலைக்கழகங்கள் பின்தங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.சமீபத்திய புள்ளி விபரப்படி சர்வதேச அளவில் 100 பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. பல்கலைக்கழகங்கள் வெறும் செங்கற்கள், சிமென்ட்டால் மட்டும் கட்டப்பட்டவை அல்ல. சிறந்த கல்வியை போதிக்கும் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டு உள்ளன.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். 300 ஆண்டுகளுக்கு முன் கல்வியில், இந்தியா தலைசிறந்த நாடாக இருந்தது போல, மீண்டும் 2047ல் உருவாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பல்கலை துணைவேந்தர் சந்திரசேகர், திருநெல்வேலி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர். உயர் கல்வித் துறை அமைச்சரான கோவி.செழியன் பங்கேற்கவில்லை.தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம், ஏ.பி.வி.பி., தலைவர் பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டதாலும் கவர்னர் வருகையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை