உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராக்கெட் தோல்வியை ஆராய குழு அமைப்பு

ராக்கெட் தோல்வியை ஆராய குழு அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.சென்னை, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: நேற்று காலை திட்டமிட்டபடி, 5:59 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதில், நான்கு நிலைகள் உள்ளன. நான்கும் வேலை செய்தால் தான், அதை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்த முடியும். முதல் இரண்டு நிலைகள் சிறப்பாக செயல்பட்டன. மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால், ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்த முடியவில்லை. நான்காம் நிலை சிறப்பாக செயல்பட்டது.எதனால் இப்பிரச்னை ஏற்பட்டது என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தோல்வி குறித்து ஆய்வு செய்கின்றனர். தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டில், அது போன்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனினும், ஒவ்வொரு மாதமும், ஒரு ராக்கெட் வீதம், இன்னும், 13 ராக்கெட்டுகளை தொடர்ச்சியாக விண்ணில் செலுத்த உள்ளோம். மக்கள் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக வாழ, அனைத்து விதமான பணிகளையும், இந்திய விண்வெளித்துறை செய்து வருகிறது. இந்தியாவுக்கு தேவையானதை, எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை விண்வெளி துறையில் சிறப்பாக செய்து வருகிறோம். இவ்வாறு நாராயணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sasikumaren
மே 19, 2025 05:05

இந்தியாவின் ராக்கெட் வெற்றிகரமாக விடும் முயற்சியை மேற்கத்திய நாடுகள் ஏதாவது இடை மறிப்பு என்று ஏதாவது முயற்சி நடைபெற்றுள்ளதா என்ற விகிதத்தில் ஆராய்ச்சி இருக்க வேண்டும் ஏனெனில் பக்கிஸை இந்திய வெளுத்தேடுத்து உள்ளது அதையும் காரணத்திலும் ஆராய்ச்சி நடத்த வேண்டும்


முதல் தமிழன்
மே 19, 2025 08:48

அண்ணே நீங்கள் ரொம்ப அறிவாளிங்க. இங்க டெக்னாலஜில கோட்டை ஓட்டை விட்டுருப்பாங்க. அதை மொதல்ல பாக்கட்டும். பிறகு பக்கத்துக்கு ஊட்டு காரனுக்கு பயப்படலாம்.


மூர்க்கன்
மே 19, 2025 10:21

அண்ணே லட்டு ல கலப்படம் பண்ணுனதால லட்டு சாமிக்கு கோவம் வந்து கவுத்துடுச்சி அப்படின்னும் சொல்றாங்க? அதுக்கும் அப்படியே ஒரு கமிஷனை போடுறது???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை