மேலும் செய்திகள்
சந்தையில் பலவீனம் தொடர வாய்ப்புள்ளது
30-May-2026
நிப்டி நேற்று 67 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 77 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறீடுகளில் 3 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.56 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 9 ஏற்றத்துடனும்; 12 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.70 சதவீத உயர்வுடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 5.57 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,402 நிறுவனங்களின் பங்குகளில் 1,379 ஏற்றத்துடனும்; 1,915 இறக்கத்துடனும்; 108 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. வேகமான சரிவு மற்றும் சரிவில் இருந்து மீட்சி என்ற இரண்டும் நடைபெற்ற பின்னருமே முக்கிய குறுகியகால சராசரிகளான 10, 20, 50 (இ.எம்.ஏ.,) நாள் சராசரிகளுக்கு கீழ் தான் நிப்டி நிறைவடைந்துள்ளது. மேலும், 200 நாள் இ.எம்.ஏ.,க்கு கீழேயும் இருப்பதால் டிரெண்டு பலவீனமாகவே இருக்கிறது எனலாம். ஆர்.எஸ்.ஐ., எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., போன்ற மொமெண்டம் இண்டிகேட்டர்களும் இறங்குமுக போக்கு இன்னும் தொடர்வதையே சுட்டிக்காட்டுகின்றன.
30-May-2026