உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு சொல்லுங்கள்: கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு சொல்லுங்கள்: கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.கருணாநிதி நுாற்றாண்டையொட்டி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி ஏற்பாட்டில், 'கருணாநிதி 100' என்ற தலைப்பில் வினாடி - வினா போட்டி நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 2 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சுயமரியாதை உணர்வு

திராவிட இயக்கக் கருத்துகளை, இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில், கருணாநிதி 100 வினாடி- - வினா போட்டி நடத்தப்பட்டுள்ளது.தமிழ் சமுதாயத்தை அடிமைப்படுத்தியோரையும், தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி. கேள்வி எழுப்பியதோடு நின்று விடாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி, தமிழ் சமுதாயத்திற்கான விடியலாக இருந்தவர்.பாசத்தைப் பொழியும்போது கனிமொழியாகவும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட லோக்சபாவில் பேசும்போது, கர்ஜனை மொழியாகவும், இந்த வினாடி - வினா நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய கனிமொழி இருக்கிறார். திராவிட இயக்கத்தின் கொள்கையை, சமூக நீதி வரலாற்றை, சுயமரியாதை சமதர்ம உணர்வுகளோடு வெளிப்படுத்தி, பார்லிமென்டில் வீரமங்கையாக கனிமொழி செயல்பட்டு வருகிறார்.

தகவல் களஞ்சியம்

இந்நிகழ்ச்சியில், 250 புத்தகங்களை ஆய்வு செய்து, 40,000 கேள்விகளை, வினாடி - வினா குழுவினர் உருவாக்கிஉள்ளனர். கேள்விகள் கேட்டதை விட, போட்டியில் பங்கேற்ற 2 லட்சம் பேரை திராவிட இயக்கம் பற்றி படிக்க வைத்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற அனைவரும் திராவிட தகவல் களஞ்சியமாக மாறியுள்ளனர். இதுதான் உண்மையான வெற்றி.போட்டியில் வென்றவர்கள், தங்களைப் போலவே பலரையும் உருவாக்க வேண்டும். இது 'வாட்ஸாப்' யுகம். வாட்ஸாப்பில் யார் யாரோ பகிரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல், உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இதுபோன்ற கருத்துகளை விதைக்கும் களப்பணியை, கனிமொழி தொடர வேண்டும். பேசிப்பேசி, எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், திராவிட இயக்கம். எனவே, பேச்சாளர்களை, எழுத்தாளர்களை இளம் தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும்.மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைகூட மிகச் சுவையாக, மக்கள் மனதில் பதியும் வகையில் நறுக்கென்று சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

M Ramachandran
டிச 01, 2024 19:32

திராவிட த்தை பற்றி என்ன சொல்ல சொல்கிறீர்கள்? நைசா அடுத்தவன் பாக்கெட்டில் எப்படி கையை விடுவது, கோயில் சொத்தை எப்படி ஆட்டை போடுவது குளம் ஏரியை plot போட்டு பணமாக்குவது.போன்ற செயல்களையா? எதை ஐயா சொல்ல சொல்கிறீர்கள்?


QCS MCCL
நவ 26, 2024 09:40

பயங்கரவாத திமுக அரசு... ஒருபக்கம் முஸ்லீம் மாணவி , மறுபக்கம் கிருத்துவ மாணவி, அரசே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, தேசத்துரோக அரசு... எந்த படுப்பதாகமும் அனைவரும் செய்யலாம் என்பதே திராவிட திருட்டு கொள்கை, இதை பரப்புங்க...


Matt P
நவ 25, 2024 14:08

திராவிட இயக்க கருத்துக்களில் முதன்மையானது கடவுள் இல்லவே இல்லை.


Yes God
நவ 24, 2024 18:52

திராவிடன் இல்லை. இருந்தால் கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் திராவிடர்களா. தமிழன் திராவிடனல்ல. கால்டு வெல் சொன்னதை கண்ணை மூடி பிடித்த ராமசாமி அதை சாக்கு வைத்து காசி பிராம்மண சாப்பாட்டு சத்திரத்தில் அய்யர் வேடமிட்டு உள்ளே நுழைய அவர்கள் கேட்ட மந்திரத்தை சொல்லாமல் திணற நெக்கிம் அவுட் பண்ணியதால் அவர்களை ஆரிய பேனரில் திட்டியே தமிழர்களை முட்டாளாக்கினார்.


Anantharaman Srinivasan
நவ 24, 2024 14:56

திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும்,” ஆம் சான்ஸ் கிடைத்தால் விடக்கூடாது. அண்ணாதுரை காலத்திலிருந்து, ஆரம்பிக்க வேண்டும். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்பதிலிருந்து ஆரம்பிப்போமா..?


Matt P
நவ 26, 2024 08:05

இவ்வளவு காலம் அடையவில்லை. அவங்க கூற்றுப்படி சுடுகாடு நிரம்பியிருக்கணும்.


Karthik
நவ 24, 2024 14:11

இது தான் திராவிட திணிப்பு......


ஆரூர் ரங்
நவ 24, 2024 12:31

வான்கோழி, மறக்க முடியுமா போன்ற சிறப்பான இலக்கியங்களை பற்றிய கேள்விகள் இல்லாமல் வினாடி வினா வீணாகி விட்டது. குறைந்தபட்சம் பா/ நாடா, நடிகை பா பத்தினியல்ல நான் முற்றும் துறந்த முனிவருமல்ல போன்றவற்றைப் பற்றி கேள்வி கேட்டிருக்கலாம். ( நொடி என்பதுதானே தமிழ்ச்சொல்? வினாடி சமஸ்கிருதம்)


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 24, 2024 12:31

கருத்துக்களை முன் வைத்து ஒட்டு கேட்க முடியுமா ???? குறிப்பாக பெண்களிடம் ....


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 11:57

குழந்தை ராமருக்கு வேர்க்கும் என்பதால் பருத்தி ஆடை அணிவித்தால் ஆரிய மாடல் , பசிக்கும் பள்ளி சிறுவருக்கு காலை உணவு அளித்தால் அது திராவிட மாடல்


ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 24, 2024 12:09

பள்ளி சிறுவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியது பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தேசிய மாடல். அதை நடைமுறைப் படுத்தியது பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மாடல். இதை இரண்டையும் காப்பி அடித்து அதை தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று அதன் மேல ஸ்டிக்கர் ஒட்டுவது திமுகவின் திருட்டு திராவிடமாடல் அதை உன்னை போன்ற மூளை மழுங்கடிக்கப் பட்ட திமுக ஊபிஸ்கள் கூவுவது பித்தலாட்ட ஏமாற்று மாடல்.


ஆரூர் ரங்
நவ 24, 2024 11:29

வினாடி வினா கேள்விகளில் 1948 முதல் 1967 வரை ஈவேரா திமுக வைப் பற்றியும் திமுக ஈவேரா பற்றியும் கூறிய ( அ) நாகரீக சண்டை கருத்துக்களைப் பற்றியும் கேட்டிருக்க வேண்டும்.(முக்கியமாக அந்த 21 ஆம் பக்கம்) .உண்மையான திராவிஷப் பண்பாடு அதுதான்.


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 11:51

என்ன பெரியவரே பதட்டம் , நம்புங்கள் நடக்கும் திருட்டு ஆரியம் நடக்கட்டும் நம்புகிறோம் திராவிடம் , எலி வீட்டு வீட்டு க்கு இருக்கு அதன் மேல் இருப்பவர் தான் இன்னும் யார் கண்ணிலும் காணோம்