உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேலிடத்துல சொல்லுங்க: வானதியிடம் கோரிக்கை

மேலிடத்துல சொல்லுங்க: வானதியிடம் கோரிக்கை

சென்னை: ''காட்டுப்பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி உதவ வேண்டும்,'' என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

காட்டுப்பன்றி மற்றும் மயில்களால் பயிர்ச்சேதம் ஏற்படுவதாக, எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், துரை சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர். காட்டுப்பன்றியை வனத்துறை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.காட்டுப்பன்றி, மத்திய அரசின் வனவிலங்குகள் அட்டவணை, 2ல் உள்ளது. அப்பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க, மத்திய அரசிடம் பேசி, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை