உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தரின் நகை மாயமான விவகாரம்: போலீசார் விசாரணையின்போது கோயில் ஊழியர் உயிரிழப்பு

பக்தரின் நகை மாயமான விவகாரம்: போலீசார் விசாரணையின்போது கோயில் ஊழியர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் காரில் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணையின் போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி 73, என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித் 29, வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர். அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவருடன் காரை பார்க் செய்து சாவியை கொடுத்துள்ளார். சாமி தரிசனம் முடிந்து காரில் கிளம்பும் போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்கநகை மாயமாகியுள்ளது. சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை. இதனையடுத்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் இன்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்துள்ளனர். அஜித்திடம் விசாரணை செய்த போது மயங்கி விழுந்துள்ளார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜித்தின் உடல் சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kulandai kannan
ஜூன் 29, 2025 15:16

சூர்யா திரைப்படம் எடுப்பாரா?


தாமரை மலர்கிறது
ஜூன் 29, 2025 01:39

வழிப்பறி செயின் திருடர்கள் போலீஸ் ஸ்டேஷனலில் வழுக்கி விழுந்து அடிபடுவது ஏற்றுக்கொள்ள கூடியது. ஆனால் இந்த போலீஸ் விசாரணையின் போது மரணம் என்பது அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்று தான் அர்த்தம். இன்னொரு சாத்தான்குளம் ஏற்றுக்கொள்ள முடியாதது.


nagendhiran
ஜூன் 28, 2025 22:26

எங்களுக்கு சாந்தான்குளம்தான் பிரச்சனை? மற்றபடி விடியலில் நடந்தால் கடந்துட்டுதான் போவோம்?


Ramesh Sargam
ஜூன் 28, 2025 22:06

கோவில் ஊழியர் தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கார் சாவியை யாரோ ஒருவரிடம் கொடுத்து பார்க் செய்ய உதவி கேட்டிருக்கிறார். அந்த யாரோ ஒருவர் அந்த நகையை ஆட்டைபோட்டிருந்தால்?


Anantharaman Srinivasan
ஜூன் 28, 2025 21:43

காரில் 10 பவுன் நகையிருந்த போது கார் சாவியை கொடுத்தது தவறு. ஊழியர் திருடியிருந்தால் அது நம்பிக்கை துரோகம். பத்து பவுன் நகை என்பதால் போலீஸ் விசாரணையில் பலாத்காரம் அத்துமீறல் நடந்திருக்க வாய்ப்பு.


Manaimaran
ஜூன் 28, 2025 21:24

விசாரணையின் போது ? 10 பவுன் நகைய அசால்டா வச்சுட்டு போ ர ள வுக்கு புத்திசாலி எல்லாம் திமிர் தனம்


புதிய வீடியோ