உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி

போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் காலை 8 மணிக்கே விசாரணையை நீதிபதி தொடங்கி விட்டார்.கடந்த ஜூன் 27ம் தேதி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை, பணம் திருடு போன சம்பவம் தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார், கோவில் நிறுவன பாதுகாப்பு ஊழியர் அஜித்குமாரை அழைத்து விசாரித்த போது உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் என்பவர் விசாரணை நடத்தி வருகிறார். வரும் ஜூலை 8ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜூலை 2ம் தேதி முதல் விசாரணை நடத்தி வரும் நீதிபதி இன்று (ஜூலை 05) காலை திடீரென திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டார். ஏ.டி.எஸ்.பி., சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் , எஸ்.ஐ., சிவப்பிரகாசம், எஸ்.எஸ்.ஐ., சிவகுமார் உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர். 4வது நாளாக இன்று நடக்கும் விசாரணையில் திருட்டு புகார் கொடுத்த நிகிதா ஆஜராக உள்ளதாக தெரிகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., சண்முக சுந்தரம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 05, 2025 20:49

என்ன விசாரணை நடத்தி என்ன பயன்? போன உயிர் திரும்ப வரப்போவதில்லை. தமிழக அரசு ஏற்கனவே பாதிக்கப்பட்ட காவலாளியின் சகோதரருக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு நிலமும் கொடுத்து அவர்கள் வாயை அடைத்து விட்டனர். இருந்தாலும், அதவாது அவர்கள் வாய் அடைக்கப்பட்டாலும், இனி அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க நீதிபதி தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை கொடுக்க வேண்டும்.


D.Ambujavalli
ஜூலை 05, 2025 17:03

அண்ணா பல்கலை வழக்கில் ஒரு சார், அஜித்குமார் வழக்கில் ஒரு சார், சார்கள் இன்னும் எத்தனை பேர் போலீசையும் அதிகாரிகளையும் பின்னிருந்த ஆட்டிவைத்துக் குற்றங்கள், கொலைகளை நிகழ்த்தப்போகிறார்களோ, அரசும் அந்த பரம யோக்கிய சார்/ சார்க்ளுக்கு பாதுகாப்பு அளித்து மேன்மேலும் இத்தகைய நிகழ்ச்சிகள், குற்றங்கள் நிகழ ஆசி கூறுமோ? தமிழகத்தை முதல்வர் இல்லை, சார்களே ஆட்சி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது


SUBRAMANIAN P
ஜூலை 05, 2025 13:32

இந்த செய்தி அமுங்கிட்டுடுச்சு. இனிமே யாரும் இதை தூக்கி சுமக்க தயாரில்லை. விசாரணையும் கண்துடைப்பாகவே இருக்கும்.. குற்றவாளிகளும் தப்பித்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானது கொடுத்தாகிவிட்டது. இனி அடுத்து இதுபோன்ற சம்பவத்துக்காக காத்திருப்போம்.? அதுவரை பை..பை..


D Natarajan
ஜூலை 05, 2025 12:12

என்ன நடக்கும். சாத்தான்குளம் கேஸ் மாதுரி தான். போலீஸ் ஸ்டாப் , IAS ஆபிசர் அனைவருக்கும் ஆயுள் தணடனை கொடுக்க முடியுமா. 5 போலீஸ்காரர்களும் தூக்கில் போட முடியுமா. முடியாது. உலகத்திலேயே மோசமான நீதி துறை


Kasimani Baskaran
ஜூலை 05, 2025 11:10

திராவிட மாடல் போலீசின் லீலைகளை அறிய வேண்டும் என்றால் அந்த சார் என்று நீதிபதி கண்டுபிடிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை