மேலும் செய்திகள்
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!
36 minutes ago
பருவ மழை துவங்கும் முன் சாலை பணிகளை முடிக்க முதல்வர் விஜய் உத்தரவு
2 hour(s) ago | 2
மதுரை: திண்டுக்கல் காளகஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் சிலைகள் மாயமானது குறித்து சி.பி.ஐ.,விசாரணை கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.தேனி மாவட்டம் சக்கம்பட்டி ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல்லில் பழமையான காளகஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி, தீர்மானம் நிறைவேற்றாமல் அக்கோயிலை இடித்து தகர்த்தனர். அரசு தரப்பில் புதிதாக கோயில் அமைக்கப்பட்டது. கோயில் இடிக்கப்படுவதற்கு முன்பாகவே கல் துாண்கள், கலசங்கள், சிலைகள், கூரைகள், மன்னர் காலத்து வைரம், தங்க நகைகள் காணாமல் போயின. நன்கொடை வசூல், செலவு விபரங்களை வெளியிடவில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அனுப்பினேன். புகாரில் முகாந்திரம் இல்லை என முடித்துவைத்தனர். அதை ரத்து செய்து சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்: மனுதாரர் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. கல்துாண்கள், சிற்பங்களை கடத்த அல்லது திருட வாய்ப்பில்லை. கருடாழ்வார், பாலதுார்கை கல்துாண்கள் பின்னமடைந்துவிட்டதால் (சேதமடைதல்) கோயில் அஸ்திவாரத்தில் இட்டு மூடப்பட்டுள்ளன. இதனால் மேல்நடவடிக்கை தேவையில்லை என கைவிடப்பட்டது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள்,‛சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.
36 minutes ago
2 hour(s) ago | 2