உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நில விவகாரம்: கோர்ட் அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மன்னிப்பு

கோவில் நில விவகாரம்: கோர்ட் அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மன்னிப்பு

சென்னை: கடலுாரில் தனியார் பள்ளி வசமுள்ள கோவில் நிலத்தை மீட்க பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து, பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர்.பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: கடலுார் மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமத்தில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 3.40 ஏக்கரில், புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ecz1ult0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த நிலம், பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. அந்த நிலத்தை மீட்க கோரி, கடந்த ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கடந்த 2019ல் தனி நீதிபதி, ஏற்கனவே இவ்விவகாரத்தில் உத்தரவிட்டுள்ளார். அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறை விரைவுபடுத்த வேண்டும். கோவில் நிலத்தை மீட்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

மனு தாக்கல்

இந்த உத்தரவின்படி, கோவில் நிலத்தை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்காத, தமிழக வருவாய் துறை செயலர் அமுதா, பள்ளி கல்வித்துறை செயலர் மதுமதி, அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கடலுார் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அறநிலையத்துறை இணை கமிஷனர் பரணிதரன், தேவநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக வருவாய் துறை செயலர் அமுதா உட்பட அனைவரும் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி, மனு தாக்கல் செய்தனர்.

சாலை வசதி

தமிழக அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''புவனகிரி தாலுகா பெரியப்பட்ட கிராமத்தில், பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.'அந்த இடம் 32 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. அங்கு சாலை வசதி ஏதுமில்லை. குவாரிகள் செயல்படுகின்றன. எனவே, கடலுார் நகரில் 5 கி.மீ., சுற்றளவுக்குள் நிலம் ஒதுக்கி தர வேண்டும்' என, பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''பிரதான சாலையில் இருந்து, அந்த நிலத்துக்கு செல்ல, சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்,'' என உறுதி அளித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜராகி, ''நீதிமன்றம் உத்தரவிட்டும், நீண்ட காலமாக நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோவிலுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களை அடுத்து, பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கக்கோரி அரசுக்கு விண்ணப்பிக்கும் படி, பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதனை பரிசீலிக்கும்படி, வருவாய் துறை செயலருக்கு உத்தரவிட்டு, ஐ.ஏ.எஸ்., மற்றும் அரசு அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M S RAGHUNATHAN
ஜூலை 11, 2025 16:39

அரசு அதிகாரிகள் எப்படி துணிந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் பிச்சை போட்டு வந்தது தானே இந்த அரசு. அப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கதி என்னாகும்? அதான் சும்மா இருக்கிறார்கள். நிறைய நிபந்தனை அற்ற மன்னிப்பு ஸ்டாக் வைத்து இருக்கிறார்கள்.


M S RAGHUNATHAN
ஜூலை 11, 2025 16:37

It is crystal clear that the top officials have scant respect for the orders of High Court. They are under the impression that this anti Hindu government will support them to hilt, if they disobey or disregard court orders. The HC should have imposed exemplary penalty on these officials, so that it would be a deterrent.


ram
ஜூலை 11, 2025 12:06

ஹிந்து மக்கள் அண்ட் ஹிந்து கோவில்களை துச்சமாக நடத்தும் திருட்டு திமுக அரசு


Siva Balan
ஜூலை 11, 2025 11:44

கிறிஸ்துவ பள்ளி மீது கை வைத்தால் தமிழக முதல்வரின் குடும்பத்திற்கு மூன்று சோறு கிடைக்காது என்பதால் நடவடிக்கை இல்லை என்பதே உண்மை....


lana
ஜூலை 11, 2025 11:18

இதன் மூலம் புரிந்து கொள்வது என்னவென்றால் கோவில் நிலத்தை அபகரித்து பள்ளி நடத்தி மக்களிடம் fees வாங்கி கிறித்துவ மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி பிறகு காலி செய்ய வேண்டும் என்றால் அரசு வேறு இடம் தரவேண்டும். நல்லா இருக்கு உங்க நியாயம். ஆக்கிரமிப்புக்கு இதுவரை என்ன தண்டனை. எதுவுமே இல்லை. கேட்டால் இவர்கள் சிறுபான்மை என்ற கூப்பாடு. பாபு வாழ்க. இன்னும் 20 -30 வருடங்களில் அனைத்து கோவில் நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்படும். அதன் பிறகு கோவில் இருக்கும் நிலமே ஆக்கிரமிப்பு என்று கோவில் இடிக்க படும். சூடு சுரணை இல்லாத நடு நிலை என்று கூறும் இந்துக்கள் இருக்கும் வரை இது நடக்கும். திருட்டு கழகம் ஒழியும் நாளே. உண்மையான விடியல். இதில் இரு கட்சிகளும் ஒன்று தான்


ganesha
ஜூலை 11, 2025 11:16

இவங்க நிறைய சம்பாதிச்சுட்டானுங்க. இவங்களை கூட தண்டிக்காட்டா, எவனாவது சட்டத்தை மதிப்பானா


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 10:49

சென்னை நுங்கம்பாக்கம் ஆலய நிலத்தில் சர்ச் கட்டப்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள். இதனைப் பற்றி அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் எனக்கூறி நழுவுகிறார். அதாவது திருட்டுக்கு துணை?


sekar ng
ஜூலை 11, 2025 10:25

IAS குற்றவாளிகள் மட்டும் மன்னிக்க படுவார்கள்


Nada Rajan
ஜூலை 11, 2025 09:55

மன்னிப்பு கேட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா


Ravi Kumar
ஜூலை 11, 2025 09:54

நீதிமன்ற செய்திகளில் வழக்கு எண் சேர்த்து வெளியிட்டால் பொது சமூக ஆர்வலர்களுக்கு குறிப்பு மற்றும் FOLLOW-UP பேருதவியாக இருக்கும்.


புதிய வீடியோ