உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில் நிலங்கள் தி.மு.க., தி.க.,வினரால் ஆக்கிரமிப்பு

 கோவில் நிலங்கள் தி.மு.க., தி.க.,வினரால் ஆக்கிரமிப்பு

ஸ்ரீரங்கம் கோவில் சொத்தின் மூலப்பத்திரம் காணவில்லை என கூறி, புதுச்சேரியில் அதற்கான சான்று பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் விற்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தி.மு.க. அலுவலகம் இருப்பதாகவும், விஞ்ஞான ஊழல் நடந்ததாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுபோல், தமிழகம் முழுதும் கோவில் நிலங்களில் தி.மு.க., - தி.க. மற்றும் அக்கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் விபரங்களை ஹிந்து முன்னணி திரட்டி வருகிறது. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட முறைகேடுகள், அதிகாரிகளின் துணையின்றி நடக்காது. இத்தகைய முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, ஹிந்து முன்னணி ஆதரவளிக்கும். - காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Marai Nayagan
செப் 21, 2026 14:22

கோவில் நிலங்களை ஐம்பது வருடமாக ஆட்டைய போட்ட திமுகவினர்ன் இருந்து சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.


Krishna
செப் 21, 2026 10:22

Oust All& Recover All Temple Lands till FinalCourt Judgements


V RAMASWAMY
செப் 21, 2026 09:17

ஹிந்துக்கள் ஏமாளிகள், ஹிந்து சம்பந்தப்பட்ட அமைப்புகளும் வெகுண்டு எழுந்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை