உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் நிரம்பிய கோவில் குளங்கள்!

சென்னையில் நிரம்பிய கோவில் குளங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நேற்று பெய்த கனமழையால் கோவில் குளங்கள் நிரம்பி இருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று (நவ.,30) கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளம், சித்திரக்குளம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச கோவில் குளம், திருப்போரூரில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பி வழிந்தன. 24.2 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட வடபழனி ஆண்டவர் கோவில் குளமும் நிரம்பி வழிந்தது.கோவில் குளங்கள் நீர் நிரம்பி காட்சியளிப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிண்டி ரேஸ் கோர்ஸில் 1.5 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு குளங்களும் நேற்றைய கனமழையால் நிரம்பியுள்ளன. அம்பத்தூரில் அய்யன் குளம், கலைவாணன் குளம், வைரக்குளம் நிரம்பி வழிந்தது. மணலியில், கோசாபூரில் உள்ள 26,625 சதுர மீட்டர் பரப்பு கொண்ட குளம் 80% நிரம்பியது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டு, வேளச்சேரி, வில்லிவாக்கம் போன்ற சில ஏரிகளைத் தவிர, நகரத்தில் பெரிய ஏரிகள் எதுவும் இல்லை. தற்போது அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் மாதவரத்தில் உள்ள 30 குளங்களை தூர்வார வேண்டும். நகருக்குள் திறந்த வெளிகள் இருந்தால், குளங்களை உருவாக்கலாம். அதிக குளங்கள் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Bhaskaran
டிச 02, 2024 13:15

ஆகவே மிச்சமிருக்கும் குளம் குட்டைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா கொடுக்கப்படும் வாய்ப்பு மிகபிரகாசமாக உள்ளது தண்ணீர் டேங்கர் லாரி காரர்களிடம் வாங்கிய பணத்துக்கு இந்த நன்றி கடன் கூட செய்யவில்லை என்றால் எப்படி


Dharmavaan
டிச 01, 2024 17:08

சென்னை பூராவும் குளமாகத்தான் இருக்கிறது


KRISHNAN R
டிச 01, 2024 16:25

பாருங்க ஒரே வாரத்தில்,, போர் வெல் மோட்டாரில் குடியிருப்புகள் உறிஞ்சி காணாமல் போய் விடும்


ராமகிருஷ்ணன்
டிச 01, 2024 13:46

கட்டுமரம் பொதுபணி துறை மூலம் திமுகவினர் தான் எல்லா குளங்களையும் ஆட்டையை போட்டு பிளாட் போட்டு விற்பனை செய்து சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு. இப்ப அதில் நிக்க வேண்டிய தண்ணீர் ரோட்டிலே நிக்குது. இயற்கை வஞ்சிக்கவில்லை. திமுக தான் சென்னைக்கு மக்களுக்கு வஞ்சனை செய்தது.


nair
டிச 01, 2024 13:46

how you are getting such useless knowledge .. you are bluffing master


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:01

நீங்கள் தான் அறிவிலி. கூகிளிலாவது pampa river photos என்று பாருங்க.


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 12:57

குருவாயூர் கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா? சபரிமலை ? பம்பா நதி பார்த்திருக்கிறீர்களா? இங்கெல்லாம் குளக்கரை, நதிக்கரையில் டைல்ஸ் போட்டிருக்கிறார்கள். கேரளாவில் பெரும்பான்மையாக எல்லா கோவில்களின் குளக்கரைகளிலும், படிக்கேட்டுகளிலும் டைல்ஸ் போட்டிருக்கிறார்கள். Anti-skid டைல்ஸ் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. பாவம். சபரிமலை யில் ஏறும் வழியில் கூட, கொஞ்சம் செங்குத்தான பகுதிகளில் கொஞ்ச தூரத்துக்கு டைல்ஸ் போட்டிருக்கிறார்கள்.


Ramesh Sargam
டிச 01, 2024 12:54

கோவில் உண்டியல்கள் நிரம்பினால், உடனே கேட்காமலேயே திமுக அரசு அதை காலி செய்யும். நிரம்பிய குளத்தில் என்ன மீன் பிடித்து தின்னவா முடியும்?


Dhurvesh
டிச 01, 2024 13:16

ஹிந்துக்களின் எதிரி என்று சொன்னவர் ஆட்சியில் கோயில் குளம் நிரம்புகிறது சுபிட்சம் தான் போங்கள்


Rasheel
டிச 01, 2024 12:14

ஹிந்து கலாச்சாரம் மிகவும் அர்த்தமுள்ளது. கோவிலில் குளங்கள் வெட்டி அரசர்கள், அருகிலுள்ள வீடு கிணற்றில் தண்ணீரை ஊற வைத்தனர். வீட்டிலும் வயல்களிலும் தண்ணீர் செழித்தது. வருடம் முப்போகம் விளைந்தது.


N Sasikumar Yadhav
டிச 01, 2024 13:20

நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்திருக்கிறதென கோயில்களை இடிக்காமலிருந்தால் போதும். திருட்டு திராவிட மாடல் களவானிங்க நிறைய கோயில்களை இப்படித்தான் இடித்தானுங்க


Ramesh Sargam
டிச 01, 2024 12:13

அட கலைஞர் கருணாநிதியின் வீடே வெள்ளம் சூழ்ந்து இருக்குதாம்.