மின்கம்பத்திலிருந்து விழுந்து தற்காலிக ஊழியர் பலி
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் சாமுவேல், 38, பலியானார். திருப்பத்துார் மாவட்டம், கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவர், வட புதுப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில், 7 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக வேலை செய்தார். அப்பகுதியில் உள்ள மின் பழுதை சரிபார்க்க, மின்கம்பத்தின் மீது ஏறிய சாமுவேல், மின்சாரம் பாய்ந்ததில், மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.