உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் சிறப்பு எஸ்ஐ வெட்டிக்கொலை: போலீசில் தந்தை, மகன் சரண்

எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் சிறப்பு எஸ்ஐ வெட்டிக்கொலை: போலீசில் தந்தை, மகன் சரண்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தந்தை மற்றும் மகன் எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சிக்குட்பட்ட சிக்கனுத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pav4jtim&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தோட்டத்தில் கடந்த சில வருடங்களாக பணியாளர்களாக திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டி தங்களது குடும்பத்துடன் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தோட்டத்தில் தந்தை- மகன் சண்டையிட்டதாக தெரிகிறது.இந்நிலையில் அருகில் வசிக்கும் தோட்டத்து உரிமையாளர்கள் அவசர உதவி 100க்கு போன் செய்த தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். பிரச்னை முடிந்து கிளம்பும் பொழுது குடிபோதையில் இருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் ஆத்திரத்தில் , காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சண்முகவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையில் சம்பவ இடத்தில் கோவை மேற்கு மண்டல டிஐஜி சசிமோகன் , மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்பி யாதவ்கிரிஸ் அசோக் நேரில் ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் சண்முகவேல் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடுமலை அருகே காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் காவல் உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

நிதியுதவி

உயிரிழந்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். ''சண்முகவேல் உயிரிழப்பு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு ஆகும். கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன்'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மகனுக்கு அரசு வேலை

எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உடனடியாக அவரது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று, மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

டிஜிபி விரைவு

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், விசாரணை நடத்தினார். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். டிஜிபி சங்கர் ஜிவாலும் அங்கு செல்ல உள்ளார்.

சரண்

இதனிடையே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கப்பாண்டி திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே, கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும்.

விரைவில் பிடிப்பார்கள்

இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் குடும்பத்தினரை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ''முழுமையான விசாரணை நடக்கிறது. யார் ஈடுபட்டார்கள் என்பது தெரிந்துள்ளதால், தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். விரைவில் பிடிப்பார்கள்'' என்று அமைச்சர் சாமிநாதன் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

lana
ஆக 06, 2025 13:37

குடிகார மன்னிக்கவும் மது பிரியர்கள் க்கு ஒரு அன்பு வேண்டுகோள் யாராவது ஒருவர்.... குடும்பத்தில் ஒருவரை ....... பிறகு பாருங்கள் . அப்பாவும் ஒன்னும் நடக்காது. அதுவே பழகி விடும். ஆனால் 1000 க்கும் 500 க்கும் ஓட்டு போடும் மக்கள் க்கு ஒரு வேண்டுகோள். இப்படியே விட்டால் எதிர்காலத்தில் இங்கு வேலை செய்ய ஆட்கள் இருக்காது. தொழில் இருக்காது. நம் சந்ததியினருக்கு வேறு மாநிலங்களில் வேலை மற்றும் துணை தேட வேண்டும். ஒரு பொறுப்பு உள்ள குடும்பஸ்தர் ஆக யோசிக்க வேண்டும்.


Thirumal Kumaresan
ஆக 06, 2025 09:36

எந்த கட்ஷிக்காரன் என்றாலும் எங்கோனுண்டெரில் போட்டு தள்ளுங்கள்.அதுவே சிறந்த நீதியாகும்


N.Purushothaman
ஆக 06, 2025 09:03

போன் போட்டு சாரி சொல்லிட்டா எல்லாம் சரியா போயிடும் ...


பேசும் தமிழன்
ஆக 06, 2025 08:52

அத்தனைக்கும் மூலகாரணம் ....விடியல் அரசு நடத்தும் சாராயக்கடை தான்....மதுவை விற்காமல் நிறுத்தினாலே ....பாதி குற்றங்கள் குறைந்து விடும்.....ஆனால் விடியல் ஆட்சி அப்படி செய்யாது.


theruvasagan
ஆக 06, 2025 08:41

பொதுமக்களையும் வெட்டறானுக. போலீசையும் பொளக்கறானுக. பாரபட்சமில்லாத சமூகநீதி. எல்லோருக்கும் எல்லாம் ஆனால் சட்டம் ஒழுங்கை கவனிக்க நேரம் எங்க இருக்கு. தொகுதியில் போட்டோஷூட் வேற மும்முரமாக போயிட்டிருக்கு.


பேசும் தமிழன்
ஆக 06, 2025 08:04

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இந்த விடியல் ஆட்சி....காவல்துறையில் இருப்பவருக்கே இங்கே பாதுகாப்பில்லை .....இது தான் தமிழக சட்டம் ஒழுங்கு லட்சணம்.


அசோகா
ஆக 06, 2025 07:27

திராவிட திராபைகளின் ஆட்சி நடத்தும் லட்சணம்


S.kausalya
ஆக 06, 2025 07:03

தினம் தோறும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை, அடிக்கடி காவல் துறை பணியாளரை வெட்டி சாய்க்கும் அவலம். கேட்பவர்க்கு சொல்லுங்க இது தான் திராவிட மாடல் ஆட்சி என்று.


raja
ஆக 06, 2025 06:48

சட்டம் டா... ஒழுங்கு டா... திருட்டு டா திராவிடம் டா மாடல் டா.. விடியல் டா தமிழகம் டா.. காரி துப்புடா....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 06, 2025 06:46

குடி கொலையை ஒரு நுன் கலையாக வளர்க்கிறது ,,, பொதுமக்களுக்கு பிரச்னை என்றால் போலீஸ் பாதுகாக்கும் ..போலீசை யார் பாதுகாப்பார்கள் .. எந்த கொம்பனாலும் ...


புதிய வீடியோ