உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகர்ப்புற உள்ளாட்சி பதவி இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதில் இழுபறி

நகர்ப்புற உள்ளாட்சி பதவி இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதில் இழுபறி

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள, 452 பதவிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில், 2021ல் தேர்தல் நடந்தது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உயிரிழப்பு, பதவி நீக்கம் போன்ற காரணங்களால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 137, ஊரக உள்ளாட்சிகளில், 315 என, மொத்தம் 452 பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, மார்ச்சில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால், இடைத்தேர்தல் தேதியை அறிவிப்பதில், இழுபறி நீடித்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு அரசின் உத்தரவுக்கு, மாநில தேர்தல் ஆணையம் காத்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து ஆலோசிக்க, தமிழக அரசின் தலைமை செயலரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அரசிடம் கலந்தாலோசித்த பிறகு, இடைத்தேர்தலை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை