உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பரிதாப பலி!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பரிதாப பலி!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yyt4gfkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூன் 11) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.பட்டாசு ஆலையில், ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 பேர் கைது!

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் போர்மேன் வீர சேகரன், மேற்பார்வையாளர் கனி முருகன் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திர சேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிவாரணம்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
ஜூன் 11, 2025 16:02

இது தொடர்கதையாகவே உள்ளது. இறந்து போவது பாவம் ஏழை மக்கள்.அரசு இயந்திரம் லஞ்சத்தில் மூழ்கி கிடக்கின்றது. இதற்க்கு பொருப்பான அதிகாரியை சிறையில் அடைக்கவேண்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 11, 2025 11:21

நெனைச்சேன். நேத்திலேந்து கரண்ட் அப்பப்ப போய்ட்டு போய்ட்டு வருது. உடம்புல கரண்ட் நெறைய உள்ளவன் எவனோ ஊரை விட்டு எங்கியோ போய்ட்டான் போல அப்படீன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் .அவன் காரியாபட்டி போயிருக்கறது இப்பத்தான் தெரியுது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை