உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆந்திராவிலும் ஆட்கள் சேர்த்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்

வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆந்திராவிலும் ஆட்கள் சேர்த்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக, ஆந்திராவிலும் ஆட்கள் சேர்க்கும் பணியில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் ஈடுபட்டுள்ளார்' என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை, 60, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பின், மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4gbv7ykv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அபுபக்கர் சித்திக் அளித்த வாக்குமூலம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1998ல், கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய புள்ளியாக அபுபக்கர் சித்திக் செயல்பட்டுள்ளார். மதுரையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற சம்பவத்திலும், 'பைப்' வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்துள்ளார். கடந்த, 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், வெளிநாடுகளுக்கு சென்று, பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டி உள்ளார். ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது போல வலம் வந்துள்ளார். அங்கு பல பகுதிகளுக்குச் சென்று, வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்களையும் வாங்கி உள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி இருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 30 கிலோ வெடி மருந்தை ஒப்படைத்து உள்ளார். இவரது தலைமையில் தான் மற்றொரு பயங்கரவாதியான முகமது அலி செயல்பட்டுள்ளார். அபுபக்கர் சித்திக், தன்னிடம் இருந்த டிஜிட்டல் ஆவணங்களில் சதி திட்டம் தீட்டுதல், ரகசிய குறியீடுகள் குறித்த விபரங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருந்தார். அது பற்றிய தகவல்களையும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venugopal S
நவ 08, 2025 11:17

இதை எல்லாம் கண்டு பிடிக்க கையாலாகாத மத்திய பாஜக அரசின் என்ஐஏவுக்கு இருபத்தைந்து வருடங்கள் தேவைப்பட்டதா?


duruvasar
நவ 08, 2025 14:45

ஆமாங்க நாங்க ஒளிந்து வைப்போம். புகலிடம் தருவோம். கைது செய்யவே நேரம் இல்லை. சரியாக சொன்னீங்க


பேசும் தமிழன்
நவ 08, 2025 19:39

என்ன செய்ய.... உங்களை போன்ற... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும்.... இருக்கும் நாட்டுக்கு விசுவாசமா இல்லாத ஆட்கள் இருக்கும் வரை கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும்..... ஆனாலும் தீவிரவாதிகள் தப்பிக்க முடியாது.


Modisha
நவ 08, 2025 08:13

எங்கே , முட்டுக்கொடுக்கும் கும்பலை காணோம் . ஐயோ பாவம்னு சொல்லிண்டு வருவாங்களே .


நிக்கோல்தாம்சன்
நவ 08, 2025 07:26

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்றொரு சொலவடை உண்டு , காட்டிக்கொடுப்பதிலும் கூட்டிக்கொடுப்பதிலும் இவர்களுக்கு இணை இவர்கள்தான்


Kasimani Baskaran
நவ 08, 2025 06:50

தகவல்களை பெற்றுக்கொண்டு இதுகளையெல்லாம் அந்தமான் சிறையில் வாழ்நாள் முழுவதும் சித்திரவதை செய்ய வேண்டும்.


Amruta Putran
நவ 08, 2025 01:58

Jihadis should be hanged


பேசும் தமிழன்
நவ 08, 2025 00:03

இவனை இன்னும் சுட்டு கொல்லாமல் தான் இருக்கிறீர்களா.... மக்களின் வரிபணத்தை வீணாக செலவு செய்யாமல்.... நாட்டுக்கு எதிரான இவனை போன்ற ஆட்களை சுட்டு கொன்று விடுவதே நாட்டுக்கு நல்லது.


உண்மை கசக்கும்
நவ 07, 2025 22:04

இப்படிப்பட்ட மனித மிருகங்களை ஏன் என்கவுண்டர் செய்ய முடியவில்லை.


PRS
நவ 08, 2025 01:33

மிருகங்களை கேவலபடுத்த வேண்டாம். அவைகளுக்கு நன்றி உண்டு. இவனை ஒரு வேளை உணவுடன் ஆயுள் கைதி ஆக அடைக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை