உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடில் ஜவுளி இயந்திரங்கள் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு

ஈரோடில் ஜவுளி இயந்திரங்கள் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு

ஈரோடு:ஈரோடில், இந்திய ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கமான இட்டாமா சார்பில், 'வாங்குவோர் - விற்போர் வணிக சந்திப்பு நாளை நடக்க உள்ளது.இது பற்றி, சங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர்ராஜ், பாலாஜி கூறியதாவது: ஈரோடு - பெருந்துறை சாலை, பரிமளம் மஹாலில் நாளை, இட்டாமா சார்பில் வாங்குவோர் - விற்போர் வணிக சந்திப்பு நடக்கிறது. அனைத்து வகை ஜவுளி சார்ந்த இயந்திரங்கள், உதிரி பாகங்கள் ஆகியவற்றின் உற்பத்தி யாளர்கள் பங்கேற்கின்றனர். மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள், ஸ்பின்னிங் நிறுவனங்களைச் சேர்ந்த 60 வணிக நிறுவனர்கள், 600க்கும் மேற்பட்ட முக்கிய வணிகர்கள் பங்கேற்கின்றனர். ஜவுளி சார்ந்த தொழில் மேம்பாட்டுக்காக, ஒவ்வொரு பகுதியாக இது போன்ற சந்திப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறோம். அன்று மாலை, கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை