உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரும்பும் கூட்டணி அமையும் கட்சியினரிடம் தங்கமணி உறுதி

விரும்பும் கூட்டணி அமையும் கட்சியினரிடம் தங்கமணி உறுதி

நாமக்கல்:''நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும்,'' என, நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., பேசியதாவது: கட்சியில் காலியாக உள்ள கிளை, வார்டு செயலர்கள் பணியிடங்கள் குறித்த விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். தெருமுனை கூட்டங்கள் நடத்தி, தி.மு.க., ஆட்சியின் அவல நிலையை விளக்கி வீடு, வீடாக நோட்டீஸ் வினியோகம் செய்ய வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நிச்சயமாக நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும். அ.தி.மு.க., 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து, பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை